இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.
நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை கடந்த ஐந்து நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான விமான பயணிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
இன்று கூட 400க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளின் நலன் கருதி தெற்கு ரயில்வே ஒரு அறிவிப்பை இன்று (டிசம்பர் 6) வெளியிட்டுள்ளது.
அதில், சென்னை எழும்பூரில் இருந்து தெலங்கானாவின் சர்லப்பள்ளி பகுதிக்கும், செகந்திராபாத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
எழும்பூரில் இருந்து ரயில் எண் 06019, இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு நாளை அதிகாலை 2 மணிக்கு சர்லப்பள்ளியை சென்றடையும்.
இதே ரயில் சர்லப்பள்ளியில் இருந்து நாளை மாலை 6:00 மணிக்கு புறப்பட்டு 8.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சில நீண்ட தூர ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
டிசம்பர் 6 முதல் டிசம்பர் 10 வரையிலான நாட்களுக்கு திருச்சி – ஜோத்பூர் ஹம்சபர் எக்ஸ்பிரஸ், சென்ட்ரல் திருவனந்தபுரம் சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் மும்பை சிஎஸ்டி – சென்னை கடற்கரை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் கூடுதலாக ஒரு ஏசி மூன்றடுக்கு பெட்டி இணைக்கப்படும்.
அதுபோன்று செகந்திராபாத் டு சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது
