கோவை மக்கள் கவனத்திற்கு.. இன்று உங்க பகுதியில் மின் தடையா?

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவையின் பல பகுதிகளில் உள்ள மின்சார வழித்தடங்களில் இன்று ஆகஸ்ட்-11ல் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அப்பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகம் முழுவதும் மாதாந்திர சுழற்சி அடிப்படையில் ஒரு நாள் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அந்த வகையில் நாளை கோவை மாவட்டத்தில் எம்ஜி சாலை, எஸ்ஐஎச்எஸ் காலனி, காவேரி நகர், ஜேஜே நகர், ஒண்டிப்புதூர், கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கேஎன்ஜிபுதூர், விஜி மருத்துவமனை பகுதிகள், மன்னம்பாளையம், வலசுபாளையம் மற்றும் அய்யப்பநாயக்கன்பாளையம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

இதனால் மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை சார்ந்த பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share