கோவை மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் – 8) 4 துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை துண்டிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
சோமையம்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட யமுனா நகர், காளப்பநாயக்கன் பாளையம், ஜி.சி.டி.நகர், லுானா நகர், கணுவாய், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், அகர்வால் பள்ளி ரோடு, சேரன் இண்டஸ்ட்ரியல் பகுதி, கே.என்.ஜி. புதுார், வித்யா காலனி, சாஜ் கார்டன், ஆசிரியர் காலனி, வி.எம்.டி.நகர், நமீதா கார்டன், அப்துல்கலாம் காலனி மற்றும் மேகலாமணி ரோடு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படும்.
இதேபோல் சோமனூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சோமனூர் கருமத்தம்பட்டி கிருஷ்ணாபுரம், சாமாளபுரம் ராமாச்சியம்பாளையம்,தொட்டிபாளையம் செந்தில் நகர் பரமசிவன்பாளையம், கணியூரின் ஒரு பகுதியிலும் நாளை மின்சாரம் துண்டிக்கப்படும்.
காளிபாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட காளிபாளையத்தின் ஒரு பகுதியிலும், ஐயம்பாளையம் ஒரு பகுதியிலும் மின்சாரம் துண்டிக்கப்படும்.
மேலும் கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ராயர் பாளையம், கருமத்தம்பட்டி நால்ரோடு, தண்ணீர் பந்தல் பகுதிகளில் மின்தடை இருக்கும்.
எலச்சிபாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட செகுடந்தாளி, எலச்சிபாளையம் பகுதிகளிலும் நாளை மின்தடை இருக்கும். இப்பகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளலாம்.
