கராச்சி துறைமுகம் மீது தாக்குதல் : களமிறங்கிய கடற்படை!

Published On:

| By Kavi

பாகிஸ்தானுடனான போர் அதிகரித்து வரும் நிலையில், கராச்சி துறைமுகத்தை குறிவைத்து இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. .Attack on Karachi port

பல்வேறு ஊடக தகவல்களின் படி, தெற்கு பாகிஸ்தானின் கராச்சி நகரத்தில் உள்ள துறைமுகப் பகுதிக்கு அருகில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன.  அதாவது இந்திய கடற்படை பாகிஸ்தானின் முக்கிய  கடற்படை தளமான கராச்சி துறைமுகம் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும்  இதனால் கணிசமான சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. 

ADVERTISEMENT

1971 ஆம் ஆண்டு போருக்குப் பிறகு இந்திய கடற்படை பாகிஸ்தானுக்கு எதிராக நேரடிப் போர்முனையைத் தொடங்கியிருக்கிறது. 

மும்பையில் இருந்து செயல்படும் இந்திய கடற்படையின் மேற்கு பிரிவு முழுமையாக களமிறங்கியுள்ளது, மேலும் இந்தப் பகுதிகளில் ஏதேனும் தாக்குதல் நடந்தால்,  பதிலடிக்கு தயாராக இருப்பதாக கடற்படை கூறியுள்ளது.  .Attack on Karachi port

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share