பட்டப்பகலில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் : எஸ்.பி விசாரணை!

Published On:

| By christopher

Attack on female DSP in broad daylight: SP investigation!

போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுக்கச் சென்ற பெண் டிஎஸ்பி மீது கும்பலாக சேர்ந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்தவர் காளிக்குமார்(33). சரக்கு வாகனத்தின் ஓட்டுனராக பணிபுரிந்து வந்த இவர், நேற்று திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

அப்போது திருச்சுழி அருகே கேத்தநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் திடீரென இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம  கும்பல், சரக்கு வாகனத்தை வழிமறித்து காளிக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

அவரது உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் காளிக்குமார் உறவினர்கள் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுபட முயன்றனர்‌.

ADVERTISEMENT

அப்போது அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர்.

அப்போது போலீசார் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இளைஞர் ஒருவர் தன்னிடம் அத்துமீற முயன்ற நிலையில், டிஎஸ்பி காயத்ரி அவரை பதில் தாக்குதல் நடத்தினார். அப்போது போராட்டக்காரர்கள் கும்பலாக சேர்ந்து  டிஎஸ்பி காயத்ரியை சுற்றிவளைத்து தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தினர். உடனடியாக காயத்ரியை அங்கிருந்த சக போலீசார் மீட்ட நிலையில் போராட்டக்காரர்கள் மீது இடையே தடியடி நடத்தினர்.

ADVERTISEMENT

இந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நிகழ்விடத்தில் விருதுநகர் எஸ்.பி. கண்ணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

ஏற்கெனவே காளிக்குமார் கொலை தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், டிஎஸ்பி மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

”ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அறிக்கையில் உடன்பாடு இல்லை”: நீதிபதி சுப்பிரமணியன்

கோட் படத்துக்கு தளர்வு… காலை 7 மணிக்கு முதல் காட்சியா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share