ஏடிஎம்-ல் பணம் எடுக்க போறீங்களா?கவனமா இருங்க!

Published On:

| By Kavi

atm service fee rs 23

இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, ஏடிஎம்-ல் பணம் எடுப்பதற்கான புதிய விதிகள் நாளை (மே 1) முதல் அமலுக்கு வருகின்றன. atm service fee rs 23

வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம் சேவையை பயன்படுத்த சில கட்டுப்பாடுகள் உள்ளன.

ADVERTISEMENT

அதாவது டெபிட் கார்டு மூலம் பணம் எடுப்பதற்கும், ஸ்டேட்மெண்ட் ஆகியவற்றைப் பார்ப்பதற்கும் ஏடிஎம் இயந்திரத்தை ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறோமோ அந்த வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் ஐந்து முறை ஒரு மாதத்திற்கு இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

மற்ற வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் பெருநகரில் மூன்று முறையும், பெருநகர் அல்லாத இடங்களில் ஐந்து முறையும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

இந்த வரம்பை மீறி ஒரு மாதத்திற்குள் ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் தலா ரூ. 21 கட்டணமாக பிடிக்கப்படும். 

ADVERTISEMENT

இந்த கட்டணத்தை 23 ரூபாயாக உயர்த்தி கடந்த மார்ச் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. atm service fee rs 23

இந்த புதிய நடைமுறை நாளை மே 1 முதல் அமலுக்கு வருகிறது 

ஏடிஎம் பயன்பாட்டு சேவை கட்டணத்தில் மாற்றங்கள் நடைமுறைக்கு வரவிருப்பதால், வாடிக்கையாளர்கள் தங்கள் பரிவர்த்தனைகளை உன்னிப்பாக கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக மெட்ரோ நகரங்களில் வசிப்பவர்கள் இதை செய்ய வேண்டும்.

பெருநகரங்களில் இலவச வரம்பைத் தாண்டி ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.23 கட்டணம் வசூலிப்பதைத் தவிர்க்க, தேவையற்ற பணம் எடுப்பதைக் கட்டுப்படுத்துவது நல்லது. அதே சமயம் பணம் கையாளுதலை குறைத்து டிஜிட்டல் பரிவர்த்தனையை வங்கிகள் ஊக்குவிப்பதால், டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு அதிக ஏடிஎம் சேவை கட்டணம் செலுத்துவதை தவிர்க்கலாம். atm service fee rs 23

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share