‘தெறி’ இந்தி ரீமேக் : கேமியோ ரோலில் சல்மான் கான்?

Published On:

| By Selvam

அட்லி இயக்கத்தில் உருவாகும் ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கேமியோவில் வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, மகேந்திரன், நைனிகா, ஏமி ஜாக்சன், ராதிகா ஆகியோர் நடித்து 2016ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தெறி’. இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார். ஜீவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்தார்.

இந்த நிலையில், இந்தப் படத்தின் இந்தி ரீமேக் தயாராகிறது என சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்த ரீமேக் படத்தை பாலிவுட் தயாரிப்பாளர்கள் ஜோதி தேஷ்பாண்டே , முரத் கேட்டாணி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

பாலிவுட் நடிகர் வருண் தவான் இந்தப் படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘பேபி ஜான்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை இயக்குநர் அட்லியின் உதவி இயக்குநர் கலீஸ் இயக்குகிறார்.

இந்த நிலையில், இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஒரு கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார் எனத் தகவல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

தற்போது, அவரும் நடிகர் வருண் தவானும் இணைந்து நடிக்கும் காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் காட்சிகளை மட்டும் இயக்குநர் அட்லியே இயக்கியுள்ளார். இந்தக் காட்சி படத்தின் கிளைமாக்ஸில் இடம்பெறும் எனத் தெரிகிறது.

மேலும், அட்லி இயக்கும் அடுத்த இந்தி படத்தில் சல்மான் கான் நடிக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவருக்காக இந்தப் படத்தில் சிறிய கவுரவ தோற்றத்தில் சல்மான் கான் நடித்துள்ளாராம்.

இந்தப் படத்திற்காக சல்மான் கான் எந்த சம்பளமும் வாங்கவில்லை என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வெளியான ‘ஜவான் ‘ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பாலிவுட்டில் தேடப்படும் இயக்குநர்களில் முதன்மை இடத்தில் இயக்குநர் அட்லி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

– ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விமான நிகழ்ச்சியில் உயிரிழப்பு… அறிக்கை அளிக்க டிஜிபிக்கு உத்தரவு!

பிக் பாஸ் வீட்டில் கழுதை… போட்டியாளர்களுடன் தங்க ஏற்பாடு!

’மகாராஜா ‘ நிதிலனுக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு!

கிறுக்கு பிடித்த ட்ரோலர்ஸ் … தலையை பிய்த்துக் கொள்ளும் பிரியா மணி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share