ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா திரைப்படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன், தற்போது நடிகர் அதர்வா ஹீரோவாக நடித்துள்ள DNA என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நிமிஷா சஞ்ஜயன் நடிக்கிறார்.
டாடா படத்தை தயாரித்த அம்பேத் குமார் தான் DNA படத்தை தயாரிக்கிறார். இந்த DNA படம் ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மே 7ஆம் தேதி நடிகர் அதர்வாவின் பிறந்த நாளை முன்னிட்டு DNA படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக் குழு வெளியிட்டு இருந்தது.
அந்த போஸ்டரில் நடிகர் அதர்வா மாஸாக முறைப்பது போல் ஒரு புகைப்படமும் அந்த புகைப்படத்திற்கு பின்னே நடிகை நிமிஷா சஞ்ஜயனுடன் அதர்வா ரொமான்ஸ் செய்வது போல மற்றொரு புகைப்படமும் என இரண்டு புகைப்படங்கள் இடம் பெற்று இருந்தது. மேலும் “72 HOURS” என்றும், “Two Strands wind around each other to make a twisted Ladder” என்றும் சில இங்கிலீஷ் வார்த்தைகள் இடம்பெற்றிருந்தது.
இந்த போஸ்டரில் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்று அறிவிக்கப்படவில்லை.
போஸ்டரின் கீழே ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், கலை இயக்குநர், சண்டை இயக்குநர், நடன இயக்குநர், பாடல் ஆசிரியர்கள் என பலரின் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது. ஆனால் படத்தின் இசையமைப்பாளர் பெயர் மட்டும் மிஸ் ஆகி உள்ளது.
ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே இசையமைப்பாளரின் பெயர் இடம் பெறாமல் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
இதற்கு முன் DNA படம் குறித்து வெளியான எக்ஸ் பதிவுகளிலும் கூட இசையமைப்பாளரின் பெயர் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளரின் பெயரை அறிவிக்காமல் இருப்பதில் என்ன சீக்ரெட் இருக்கிறது என்பதை DNA படக் குழுவினர் தான் கூற வேண்டும்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ் : திடீர் வீக்கம் வலி, அரிப்பு… சிகிச்சை அவசியமா?
பியூட்டி டிப்ஸ்: பெர்ஃபியூம், டியோடரன்ட் இல்லாமல் வியர்வை வாடையை விரட்ட…
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
பாகிஸ்தானில் நடைபெறும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்தியா பங்கேற்குமா?