Video : ஹாலிவுட் விருதுக்கு ’ஜவான்’ பரிந்துரை : அட்லீ பெருமிதம்!

Published On:

| By christopher

Astra Award 2024 for Jawan

ஹாலிவுட் கிரியேட்டிவ் அலையன்ஸ் 2024 வழங்கும் ஆஸ்ட்ரா விருதுகளில் பரிந்துரைக்கப்பட்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை, கௌரி கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்து வழங்க, ஷாருக் கானின் நடிப்பில், அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் பெற்றுள்ளது.

மேலும் இந்தியாவிலிருந்து இந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட ஒரே திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் பல நாடுகளிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட பல சிறந்த படங்களான அனாடமி ஆஃப் எ ஃபால் (பிரான்ஸ்), கான்க்ரீட் உட்டோபியா (தென் கொரியா), ஃபாலன் லீவ்ஸ் (பின்லாந்து) ஃபெர்ஃபெக்ட் டேஸ் (ஜப்பான்), ரேடிகல் (மெக்சிகோ), சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ (ஸ்பெயின்), தி டேஸ்ட் ஆஃப் திங்ஸ் (பிரான்ஸ்), தி டீச்சர்ஸ் லவுஞ்ச் (ஜெர்மனி) மற்றும் தி சோன் ஆஃப் இன்ரஸ்ட் (யுனைடெட் கிங்டம்) போன்ற மிகச்சிறந்த 500 படங்களில், கலந்துகொண்ட ஒரே இந்தியப்படம் ஜவான் ஆகும்.

ஹாலிவுட் கிரியேட்டிவ் அலையன்ஸ் 2024 வழங்கும் ஆஸ்ட்ரா விருதுகளில் இயக்குநர் அட்லீ இந்தியா நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டார். இந்நிகழ்வில் கோல்டன் குளோப் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்ற முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

ஜவான் படம் உலகளவில் பிரபலமான பார்பி, ஓப்பன்ஹைமர், கில்லர் ஆஃப் தி ஃப்ளவர் மூன், ஜான் விக், ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் மற்றும் பல பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப் பட்டியலிலும் இணைந்துள்ளது.

ராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அதிக சம்பளம் கேட்ட தனுஷ் : பதறிய தயாரிப்பு நிறுவனம்!

அமைச்சர் பதவி ராஜினாமா : சிறையில் இருந்து செந்தில் பாலாஜி கடிதம்!

பியூட்டி டிப்ஸ்: சருமத்தைப் பளிச்சிடவைக்க… கோதுமை மாவு ஃபேஸ் பேக்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share