ஹெல்த் டிப்ஸ்: வீஸிங் பிரச்சினை உள்ளவர்களே… கோடையில் இந்த விஷயத்தை மறந்துவிடாதீர்கள்!

Published On:

| By Kavi

வீஸிங், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளவர்கள், குளிர்காலத்தில் தங்கள் உடல்நலம் கருதி பழைய சாதம், தயிர், இளநீர், வெந்தயம் போன்றவற்றை தவிர்ப்பார்கள். இவர்கள் கோடையின் வெப்பத்தில் இருந்து தப்பிக்க இந்தக் குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடலாமா?

வீஸிங் (Wheezing) பிரச்சினை உள்ளவர்களை இரண்டாகப் பிரிக்கலாம். சிலருக்கு குளிர்காலத்தில் வீஸிங் பிரச்சினை வரும். அவர்கள் கோடைக்காலத்தில் நார்மலாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் குளிர்ச்சியான பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.

ADVERTISEMENT

இன்னும் சிலருக்கு கோடையிலும் இத்தகைய குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொண்டால் ஆஸ்துமா மற்றும் வீஸிங் பிரச்சினைகள் வரலாம். அப்படிப்பட்டவர்கள் இந்த உணவுகளைத் தவிர்ப்பதே சிறந்தது.

பழைய சாதம், வெந்தயம், இளநீர் என இவை எல்லாமே உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியவைதானே தவிர, வீஸிங் பிரச்சினையைத் தூண்டக்கூடியவை அல்ல.

ADVERTISEMENT

எனவே இந்த உணவுகளை மிதமாக எடுத்துப் பார்க்கலாம். அப்படி எடுக்கும்போது வீஸிங் அறிகுறிகள் ஏற்படுவதாக உணர்ந்தால் உடனடியாக நிறுத்திவிடலாம்.

உடல் குளிர்ச்சியடைய வேண்டும் என்றால் வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் எடுத்துக்கொள்ளலாம். வெந்தயம் சாப்பிட்டாலே சளி பிடிக்கிறது, வீஸிங் வருகிற மாதிரி தெரிகிறது என்பவர்கள், ஊறவைத்த வெந்தயத்துக்கு பதில், முளைகட்டிய வெந்தயம் சாப்பிடலாம்.

ADVERTISEMENT

இது குளிர்ச்சியை சற்று மட்டுப்படுத்திக் கொடுக்கும். அதேசமயம், வெந்தயத்தின் அத்தனை நல்ல பலன்களையும் உடலுக்குக் கொடுக்கும்.

இளநீரையும் சிறிது சிறிதாகக் குடித்துப் பார்க்கலாம். முதல் நாள் சிறிது குடித்து எந்தப் பிரச்னையும் இல்லை என்றால் அடுத்தடுத்த நாள்களும் குடிக்கலாம்.

பழைய சாதத்தை காலையில் சாப்பிடுவது மிகுந்த ஊட்டமளிக்கக்கூடியதாக அமையும். அதனால் வீஸிங் வருவதற்கு வாய்ப்பே கிடையாது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல வெயில் நாள்களிலும் வீஸிங் வரும் என்பவர்கள் இவற்றைத் தவிர்த்து விடலாம்.

வீஸிங் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்தக் காரணத்தால்தான் அது வரும் என்று சொல்ல முடியாது. அலர்ஜியை ஏற்படுத்தும் விஷயங்கள் நபருக்கு நபர் மாறும்.

சிலருக்கு உணவின் மூலம் ஒவ்வாமை ஏற்பட்டு வீஸிங் வரலாம். வேறு சிலருக்கு தூசு அலர்ஜியால் வீஸிங் வரலாம்.

எனவே, எந்தக் காரணத்தால் வீஸிங் பாதிப்பு வருகிறது என்று உணர்ந்து, அதைத் தவிர்த்தாலே போதுமானது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வீர தீர சூரன் : சம்பவம் Loading… புது அப்டேட்..!

டாப் டென் நியூஸ்: ரிலாக்ஸ் அன்னையர் தினம் முதல் சென்னை சூப்பர் கிங்ஸின் டென்ஷன் மேட்ச் வரை!  

என்னது டீக்கு சம்மர் ஸ்பெஷல் ஆஃபரா?  அப்டேட் குமாரு

விமர்சனம் :’ ரசவாதி ‘!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share