கருப்பு கோட் போட்டவர்களுக்கு ‘கவர்மெண்ட்’ வேலை: டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு… சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published On:

| By Santhosh Raj Saravanan

Assistant public prosecutor job vacancies in TNPSC

“வக்கீல் தொழில்ல செட்டில் ஆகுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுது… பேசாம ஒரு அரசு வேலைக்குப் போயிடலாமா?” என்று யோசிக்கும் இளம் வழக்கறிஞர்களுக்கு, டிஎன்பிஎஸ்சி (TNPSC) ஒரு ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீதிமன்றங்களில் அரசு தரப்பில் வாதாடும் கம்பீரமான ‘உதவி அரசு வழக்கறிஞர்’ (Assistant Public Prosecutor – Grade II) பணியிடங்களை நிரப்பப் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.

தனியார் பிராக்டிஸ் ஒரு பக்கம் இருந்தாலும், ‘அரசு வக்கீல்’ (APP) என்பது தனி கெத்து. அந்தப் பதவிக்காகக் காத்திருப்பவர்கள் இந்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.

ADVERTISEMENT

எத்தனை இடங்கள்?

தமிழக அரசின் உள்துறை மற்றும் சட்டத்துறையின் கீழ் வரும் இந்தப் பதவியில், மொத்தம் 74 காலியிடங்கள் (எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது) நிரப்பப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் இந்தப் பணி நியமனம் இருக்கும்.

ADVERTISEMENT

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

சட்டம் படித்த எல்லோரும் இதற்கு விண்ணப்பிக்க முடியுமா என்றால், ‘இல்லை’ என்பதுதான் பதில்.

ADVERTISEMENT

இதற்குச் சில நிபந்தனைகள் உள்ளன:

  • கல்வி: பி.எல் (B.L) அல்லது எல்எல்பி (LLB) பட்டம் பெற்று, பார் கவுன்சிலில் (Bar Council) முறையாகப் பதிவு செய்திருக்க வேண்டும்.
  • அனுபவம்: இதுதான் முக்கியம். விண்ணப்பதாரர்கள் வழக்கறிஞராகக் குறைந்தது 5 ஆண்டுகள் நீதிமன்றங்களில் பிராக்டிஸ் செய்த அனுபவம் (Active Practice) வைத்திருக்க வேண்டும்.
  • மொழி: தமிழில் சரளமாக வாதாடும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 34 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். (அரசு விதிகளின்படி இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. அதிகபட்சம் 37 அல்லது அதற்கு மேல் இருக்கலாம்).

சம்பளம் சும்மா ‘ஜம்’முனு இருக்கும்!

குரூப்-1 அதிகாரிக்கு இணையான சம்பளம் இந்தப் பதவிக்கு உண்டு.

  • ஊதிய நிலை: Level-22.
  • அடிப்படைச் சம்பளமே ரூ.56,100ல் தொடங்கும். அதிகபட்சமாக ரூ.1,77,500 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர படிகள், அரசு வாகனம், கௌரவம் என அனைத்தும் கிடைக்கும்.

தேர்வு முறை எப்படி?

விண்ணப்பதாரர்கள் மூன்று கட்டங்களைத் தாண்ட வேண்டும்.

  • முதல்நிலைத் தேர்வு (Prelims): சட்டம் மற்றும் பொது அறிவு சார்ந்த கொள்குறி வகைக் கேள்விகள்.
  • முதன்மைத் தேர்வு (Mains): விரிவாக விடை அளிக்கும் தேர்வு.
  • நேர்காணல் (Interview): சட்ட அறிவு மற்றும் ஆளுமைத் திறன் சோதிக்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

விருப்பமும் தகுதியும் உள்ள வழக்கறிஞர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஒருமுறை பதிவு (One Time Registration) செய்துவிட்டு, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தனியார் வழக்குகளில் ஜெயிப்பதை விட, அரசு தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் எடுத்துரைக்கும் இந்தப் பணிக்கு, சட்ட நுணுக்கங்கள் (CrPC, IPC, Evidence Act) அத்துப்படியாக இருக்க வேண்டும். 5 வருஷம் கோர்ட் படி ஏறிய அனுபவம் உள்ளவர்களுக்கு இது அல்வா சாப்பிடுவது போல!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share