மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல் அசாத் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைமையிலான கிளர்ச்சிப் படையினர் தீவிர தாக்குதல் நடத்தி அரசுப் பிடியில் இருந்த நகரங்களைக் கைப்பற்றியது.
கடைசியாக தலைநகர் டமாஸ்கஸ் நகரை ஹெச்.டி.எஸ். கைப்பற்றியதன் வாயிலாக ஆசாத்தின் சாம்ராஜ்ஜியத்திற்கு முடிவுரை எழுதப்பட்டது.
இதையடுத்து, சிரிய அதிபர் ஆசாத் தன் மனைவி குடும்பத்துடன் ரஷ்யாவுக்கு தப்பினார். தற்போது, மாஸ்கோவில் ரகசிய இடத்தில் அவருடைய குடும்பம் வசிக்கிறது. இதற்கிடையே, ஆசாத்தின் மனைவி ஆஷ்மா கணவரிடத்தில் இருந்து விவகாரத்து கோரியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், ஆஷ்மாவுக்கு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்கனவே அவருக்கு மார்பக புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர் சிகிச்சை காரணமாக அவர் குணமடைந்தார்.
இந்த நிலையில்தான் எலும்பு மற்றும் ரத்தபுற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறை அவர் உயிர் பிழைக்க 50 சதவித வாய்ப்பே உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.
பிரிட்டனில் சிரிய பெற்றோருக்கு பிறந்த ஆஷ்மா கம்ப்யூட்டர் சயின்சில் பட்டம் பெற்றவர். லண்டன் கிங்ஸ் கல்லூரியில் படித்தவர் 2000 ஆம் ஆண்டு சிரிய அதிபரை திருமணம் செய்தார். பின்னர், சிரியாவிலேயே வசித்தார். தற்போது, தனது சொந்த ஊரான லண்டனுக்கு சென்று வாழ முடிவு செய்து சிரிய அதிபரை பிரிய அவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு பெயர்… ஸ்டாலின் அறிவிப்பு!
ஆன்ட்ராய்டில் புக் செய்தால் ஒரு கட்டணம்: ஐபோனில் புக் செய்தால் விலை அதிகம்… வாடகை கார் தில்லாலங்கடி?