கடைசி வரை நடிகர் திலகம் பாட்டு… அமைதியாக அடக்கம் செய்யப்பட்ட சிங்கப்பூர் சிவாஜி

Published On:

| By Kumaresan M

சிங்கப்பூர் சிவாஜி என்று அன்புடன் அழைக்கப்பட்ட அசோகன் முனியாண்டி மேடையில் சிவாஜி போல நடித்து கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரின் உடல் நேற்று (அக்டோபர் 15) அடக்கம் செய்யப்பட்டது.

சிங்கப்பூரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப்போல வேடமிட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற  அசோகன் முனியாண்டி அக்டோபர் 12 ஆம் தேதி மேடையில் நடித்து கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து இறந்து போனார். அவருக்கு 60 வயதாகிறது. நடிகர் சிவாஜி கணேசன் நடித்த சிவகாமியின் செல்வன் என்ற படத்தில் இடம் பெற்ற உள்ளம் ரெண்டு பாடலை பாடிக் கொண்டிருக்கும் போது அவர் மயங்கி விழுந்தார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக சிங்கப்பூர் மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ADVERTISEMENT

ஆடைகள், பாவனைகள்…அனைத்திலும் நடிகர் சிவாஜி நடிப்பை அப்படியே இவர் வெளிப்படுத்துவார்.  சிவாஜியாக வேடமிட்டு அவர் மக்களுடன் பேசும்போது மக்களுக்கு நிஜத்தில் நடிகர் திலகத்துடன் உரையாடும் உணர்வு ஏற்படுவதாக கூறுவார்கள்.

அசோகனின் மறைவு சிங்கப்பூரின் கலைத்துறைக்குப் பெரும் இழப்பு என்றும் பலரும் கூறினர். உயிர்வாழ்ந்த கடைசி நிமிடம் வரை மக்களுக்கு நிகழ்ச்சிகளைப் படைத்த அவரை உண்மையான கலைஞர் என்று பலரும் உருக்கமாக கூறினர்.

ADVERTISEMENT

இவர்,  மலேசியாவிலும் பல மேடை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். சிங்கப்பூர், மலேசியா, இந்திய தமிழர்களிடத்தில் மிகுந்த பிரபலமான கலைஞராக அவர் வலம் வந்தார். அவரது இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமான ரசிகர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர். மரணமடைந்த சிங்கப்பூர் சிவாஜிக்கு மனைவி இரு மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

ADVERTISEMENT

எம்.குமரேசன்

 மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில் இன்று வழக்கம்போல் இயங்குமா?

எந்த தியாகத்திற்கும் தயார்… என்ன சொல்ல வருகிறார் எடப்பாடி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share