ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் சீனாவில் இந்த மாதம் 8-ஆம் தேதி தொடங்கியது.
ஹூலுன்பியுர் நகரில் நடைபெற்ற இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், கொரியா மற்றும் மலேசியா என 6 நாடுகள் கலந்துகொண்டன.
இந்திய அணி தனது முதல் போட்டியில் அபாரமாக விளையாடி, சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இத்தொடரின் அரையிறுதிக்குப் பாகிஸ்தான், சீனா மற்றும் கொரியா அணிகளும் தேர்வானார்கள்.
அரையிறுதியில் கொரியாவுடன் மோதிய இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தானும் சீனாவும் மோதிக்கொண்டன.
இந்த போட்டி 1-1 என்ற டை ஆன நிலையில், பெனல்டி ஷூட் அவுட்டில், 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குச் சீனா முன்னேறியது.
இன்று(செப்டம்பர் 17) நடந்த இறுதிப் போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் மிகச் சிறப்பாக விளையாட, இரு அணிகளாலும் ஒரு கோல் கூட போட முடியவில்லை.
தொடர்ந்து ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருந்த போது, ஆட்டத்தின் கடைசி கால் பகுதியில், இந்திய அணித்தலைவர் ஹர்மன் ப்ரீத் சிங் , மற்றொரு வீரரான ஜுக்ராஜ் சிங்கிற்கு பிரமாதமான ஒரு பாஸ் கொடுக்க, அதை அழகாக வாங்கி கோல் அடித்தார் ஜுக்ராஜ் சிங்.
இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாகவும், ஒட்டுமொத்தமாக 5ஆவது முறையாக இந்திய அணி ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.
ஏற்கனவே நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெண்கலம் பதக்கம் வென்றிருந்த நிலையில், இப்போது ஐந்தாவது முறையாக ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளதை இந்திய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
தலைமை நீதிபதி வீட்டில் கணேஷ் பூஜை… காங்கிரஸ் மீது மோடி தாக்கு!
ஜெயம் ரவியை ஆட்டி வைக்கும் அந்த பாடகி யார்? கோவா இல்லையாம் சுத்தமான தமிழ் பொண்ணாம்!