ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
இன்று நடைபெற்ற மகளிருக்கான துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏர் ரைபில் தனி நபர் பிரிவில் இந்தியாவின் பாலக் தங்கமும், ஈஷா சிங் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளனர். ஆசிய விளையாட்டு போட்டியில் ஈஷா சிங் பெறும் நான்காவது பதக்கம் இதுவாகும்.
முன்னதாக துப்பாக்கி சுடுதல் குழு போட்டிகளில் 10 மீ ஏர் பிஸ்டல் ரைபில் பிரிவில் வெள்ளியும், 25 மீ பிஸ்டல் பிரிவில் தங்கமும் வென்றார். 25 மீ பிஸ்டல் தனி நபர் பிரிவில் வெண்கலம் வென்றார். ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர்களில் தனி நபர் ஒருவர் பெறும் அதிக பதக்கங்கள் இதுவாகும்.
முன்னதாக இன்று நடைபெற்ற மகளிர் 10 மீ ஏர் பிஸ்டல் குழு பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற திவ்யா, பாலக், ஈஷா சிங் வெள்ளி வென்று அசத்தினர். தற்போது இந்தியா 8 தங்கம், 11 சில்வர், 11 வெண்கல பதக்கம் என 30 பதக்கங்களை குவித்துள்ளது.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
வாச்சாத்தி சம்பவத்தில் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவில்லை: பாலகிருஷ்ணன்