ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: வெண்கலம் வென்ற தமிழக வீரர்!

Published On:

| By Jegadeesh

Asian Athletics Championship Tamil Nadu player wins bronze

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் நான்காவது நாளான இன்று(ஜூலை 15) தமிழகத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

25 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இதில் இரண்டாவது நாளில் ஜோதி யர்ராஜி, அப்துல்லா அபூபக்கர், அஜய் குமார் சரோஜ் ஆகியோர் தங்கப்பதக்கங்களை வென்றனர்.

மேலும், மூன்றாவது நாளான நேற்று (ஜூலை 14) ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் தஜிந்தர்பால் சிங் 20.23 மீட்டர் தூரம் எறிந்து தங்க பதக்கத்தை வென்றார். அதேபோல் பெண்களுக்கான 3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் பந்தய தூரத்தை 9.38 நிமிடங்களில் கடந்து பரூல் சவுத்ரி தங்கப்பதக்கத்தை வென்றார்.

ADVERTISEMENT

இந்நிலையில், நான்காவது நாளான இன்று (ஜூலை 15) ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.

ADVERTISEMENT

அதன்படி, அவர் இலக்கை 49.09 வினாடிகளில் கடந்துள்ளார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இதுவரை 5 தங்கம், ஒரு வெள்ளி உட்பட 10 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

”இந்தியாவின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை அர்பணித்தவர் காமராஜர்”-மோடி புகழாரம்!

“மதுரை ஐடி பூங்கா தென்மாவட்ட வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்” – ஸ்டாலின்

“மாவீரன் படத்துக்கு இதுதான் ரெஃபரன்ஸ்” : மடோன் அஸ்வின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share