ADVERTISEMENT

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் : வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரர்கள்!

Published On:

| By Jegadeesh

Asian Athletics Championship

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் நான்காவது நாளான இன்று (ஜூலை 15) அடுத்தடுத்து பதக்கங்களை வென்று இந்திய வீரர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

25 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னதாக நான்காவது நாளான இன்று (ஜூலை 15) ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் வெண்கல பதக்கத்தை வென்றார்.

இந்நிலையில், ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளிப்பதக்கங்கள் கிடைத்துள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் சர்வேஷ் 2.26 மீட்டர் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார். அதேபோல், ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் எம் ஸ்ரீசங்கர் 8.37 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

ADVERTISEMENT

மு.வா.ஜெகதீஸ் குமார்

சிறை தண்டனை : ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

“விஜய் மட்டுமல்ல அனைவரும் அரசியலுக்கு வரலாம்” – சரத்குமார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share