ஆசிய கோப்பை… திணறும் இந்தியா: மழையால் ஆட்டம் பாதிப்பு!

Published On:

| By Jegadeesh

Asia Cup Stifling India

இந்தியாவில் அக்டோபர் மாதம் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ள சூழலில் ‘ஆசிய கோப்பை தொடர்’ கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடர் வரும் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் மோதுகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில் , இன்று (செப்டம்பர் 2) நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

இலங்கையில் உள்ள கண்டியில் பல்லக்கேல் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய இன்றைய லீக் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ADVERTISEMENT

அந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரு அணிகளும் மோதுவதால் இரு நாட்டு ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 4 ஓவர்கள் வரை விக்கெட் இழப்பு இன்றி 15 ரன்களை எடுத்தது.

ADVERTISEMENT

இடையே மழையால் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. பின்னர், மழை நின்றவுடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 22 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

விராட் கோலி 7 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக்கட்டினார். பின்னர், வந்த ஸ்ரேஸ் 9 பந்துகளில் 2 பவுண்டரிகள் எடுத்து 14 ரன்களுடன் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இப்படி பாகிஸ்தான் வீரர்களின் பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறி வருகிறது.

தற்போதைய நேரப்படி இந்திய அணி 11.2 ஓவர்கள் முடிவில் 51 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. மீண்டும் மழை பெய்து வருவதால் ஆட்டம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ரஜினி- ஓபிஎஸ் திடீர் சந்திப்பு!

அனுமதியின்றி ஆதியோகி சிலை கட்டப்பட்டதா?: ஈஷா சொல்வது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share