இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ள 16-வது ஆசிய கோப்பை தொடர் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தொடங்கியது.
இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்களான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இன்று (செப்டம்பர் 2 ) இலங்கையில் உள்ள கண்டியில் பல்லக்கேல் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரு அணிகளும் மோதுகின்றன.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 4 ஓவர்கள் வரை விக்கெட் இழப்பு இன்றி 15 ரன்களை எடுத்தது. இடையே மழையால் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. பின்னர், மழை நின்றவுடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 22 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
விராட் கோலி 7 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக்கட்டினார். பின்னர், வந்த ஸ்ரேஸ் 9 பந்துகளில் 2 பவுண்டரிகள் எடுத்து 14 ரன்களுடன் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அவரைத்தொடர்ந்து 32 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து சுப்மன் கில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஜோடி பாகிஸ்தான் வீரர்களின் பந்துகளை பதம் பார்த்தது.
அந்த வகையில், 81 பந்துகளில் இஷான் கிஷான் 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 82 ரன்கள் எடுத்தார்.
மறுபுறம் தன்னுடைய அதிரடியை காட்டிய ஹர்த்திக் பாண்ட்யா 90 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என மொத்தம் 87 ரன்கள் விளாசினார்.
அவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜா 14 ரன்களும் ஜஸ்பிரித் பும்ரா 16 ரன்களும் எடுத்தனர். அதன்படி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 266 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்நிலையில், 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்க உள்ளது.
இந்தியா முதல் இன்னிங்ஸை முடித்த நிலையில், மழை காரணமாக பாகிஸ்தான் அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் ஆட்டம் தொடங்க தாமதம் ஆகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கல்விச் சான்றிதழ்களில் ஆதார் எண் இருக்கக் கூடாது.. யுஜிசி அறிவிப்பு!