சிஎஸ்கேவில் அஸ்வின்.. பெரிய பதவி கொடுத்த நிர்வாகம்!

Published On:

| By indhu

இந்திய கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக அஸ்வின், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்போது அஸ்வின் இணைந்துள்ளார். அதிலும் முக்கிய பதவி ஒன்று அஸ்வினுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் ஏலம் எதுவும் தற்போது நடைபெறவில்லை என்றாலும், அஸ்வின் சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார். ஐபிஎல் தொடரின் முன்னணி அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னையின் புறநகரில் செயல்திறன் மையம் ஒன்றை திறக்க திட்டமிட்டுள்ளது. அதன் தலைமை பொறுப்பை அஸ்வினுக்கு சிஎஸ்கே நிர்வாகம் கொடுத்துள்ளது.

அந்த செயல்திறன் மையத்தில் தான் இனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் பயிற்சி பெறுவார்கள் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு பயிற்சி பெறும் வீரர்களுக்கு ஆலோசனை வழங்குவது, எந்த மாதிரியான பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்பதை அஸ்வின் தான் முடிவு செய்யும் நிலையில் உள்ளார்.

இதனையடுத்து அஸ்வினை 2025 ஐபிஎல் மெகா ஏலத்தின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியதாவது, “அஸ்வினை ஏலத்தில் வாங்குவது என்பது எங்களது கட்டுப்பாட்டில் இல்லை. ஏலத்தின் தன்மையை பொறுத்து அன்று என்ன வாய்ப்பு இருக்கிறதோ அதன் படி நடக்கும்.

அஸ்வின் சிஎஸ்கே அணிக்காக உருவாக்கப்பட்ட உயர் செயல்திறன் மையத்தில் பொறுப்பேற்கிறார். அங்கு நடைபெறும் அனைத்து செயல்பாடுகளையும் அவரே கவனிப்பார். தற்போது அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு பகுதி ஆவார்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னையில் ஜில் வெதர் – வானிலை மையம் குளுகுளு அப்டேட்!

தேர்தல் வெற்றி: ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன ஐஏஎஸ் அதிகாரிகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share