நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் அறிமுக இயக்குநர் சி.எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் சபா நாயகன்.
இந்த படத்தில் அசோக் செல்வனுடன் நடிகர்கள் மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி செளத்ரி, பிரபல யூடியூப் சேனலான நக்கலைட்ஸின் அருண், எருமைசாணி சேனல் புகழ் ஜெய்சீலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். லியோன் ஜேம்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
சபா நாயகன் படம் வரும் டிசம்பர் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
பல பெண்களை காதல் செய்யும் துறுதுறு இளைஞராக நடித்திருக்கிறார் அசோக் செல்வன். கம்மிங் ஆப் ஏஜ் ஜானரில் இந்த படம் உருவாகி உள்ளது. ஸ்கூல் பையனாக அசோக் செல்வனின் தோற்றம் நிச்சயம் நம்மை ஆச்சரியப்படுத்தும்.
தற்போது சபா நாயகன் படத்தின் ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் – புரூக்கோலி சூப்
