‘கொலை பண்றது ஒரு அடிக்‌ஷன்’: போர் தொழில் டீசர்!

Published On:

| By Monisha

porthozhil teaser

‘தம் அடிச்சா கொஞ்ச நேரத்துல திரும்பி அடிக்கணும்னு தோணுதுல்ல… கொலைகாரனுக்கும் அப்படிதான், கொலை பண்றது ஒரு அடிக்‌ஷன்’ என சரத்குமார் பேசும் வசனம் இடம்பெற்றுள்ள போர் தொழில் படத்தின் டீசர் புதுமைகள் எதுவும் இன்றி வெளியாகியுள்ளது.

அசோக் செல்வன் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் ‘நித்தம் ஒரு வானம்’. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘போர் தொழில்’.

விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார்.

அப்லாஸ் என்டர்டெயின்ட்மென்ட் தயாரித்துள்ள இப்படம் வரும் ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் நேற்று (மே 23) மாலை வெளியாகியுள்ளது.

சைக்கோ கொலையாளி ஒருவரை காவல் அதிகாரிகளான சரத்குமாரும், அசோக் செல்வனும் இணைந்து தேடுகின்றனர். கொலைகாரனைத் தேடும் போலீஸ் என்ற ஒற்றை வரிதான் படத்தின் திரைக்கதை என்பதை உறுதி செய்கிறது டீசர்.

கொலை, கொள்ளைகளை அடிப்படையாக கொண்டு திரைக்கதை எழுதப்படும் க்ரைம் படங்களுக்கு உரிய கொடூர கொலைகள் டீசரில் காட்டப்படுகின்றன.

‘தம் அடிச்சா கொஞ்ச நேரத்துல திரும்பி அடிக்கணும்னு தோணுதுல்ல… கொலைகாரனுக்கும் அப்படிதான், கொலை பண்றது ஒரு அடிக்‌ஷன்’ என சரத்குமார் பேசும் வசனம் கவனம் பெறுகிறது.

பார்த்து பழகிய க்ரைம் த்ரில்லர் படங்களுக்கே உண்டான பார்முலாவில் எழுதப்பட்டுள்ள திரைக்கதை போர் தொழில் திரைப்படம் என்பதை டீசர் உறுதிப்படுத்துகிறது.

இராமானுஜம்

துப்பறிவாளனில் விஷாலுக்கு தொப்பி வைத்தது ஏன்?: மிஷ்கின் விளக்கம்!

ஏற்றுமதியாகும் இருமல் மருந்துகளுக்கு சோதனை அவசியம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share