ஜெயிலர் படத்திற்குப் பிறகு, நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170-வது படத்தில் அவருடன் நடிகர் அரவிந்த் சாமி நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது, இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த படத்தில், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகி பாபு உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
ஆகஸ்ட் 22-ஆம் தேதி ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் எந்த இயக்குனருடன் இணையப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது.
அதே சமயம், சிவாகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி, ரஜினிகாந்த்தின் 170ஆவது படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணிகள் மற்றும் படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த நடிகர் அரவிந்த் சாமியிடம் ரஜினிகாந்தின் அடுத்த படமான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நீங்கள் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது என்று தொகுப்பாளர் எழுப்பிய கேள்விக்கு, “நடிகர் ரஜினிகாந்துடன் அடுத்தப் படத்தில் தான் இணைந்து பணியாற்ற உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதனால் நடிகர் ரஜினிகாந்தின் அடுத்தப் படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1991-ஆம் ஆண்டு வெளியான தளபதி படத்தில் அரவிந்த் சாமி, நடிகர் ரஜினிக்கு எதிர் கதாப்பாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார்.
இந்தக் கூட்டணி மீண்டும் அமையப்போகிறது என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
செல்வம்
600 திரைகளில் வெந்து தணிந்தது காடு வெளியானது!
கக