ADVERTISEMENT

திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார் கெஜ்ரிவால்: ஆரவாரம் செய்த தொண்டர்கள்!

Published On:

| By Selvam

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதை அடுத்து திகார் சிறையில் இருந்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று (மே 10) வெளியே வந்தார்.

டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில், அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா அடங்கிய அமர்வு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT

இந்த உத்தரவை மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சரத் பவார், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் வரவேற்றனர்.

இந்தநிலையில், டெல்லி திகார் சிறையில் இருந்து இன்று இரவு 7 மணியளவில் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியே வந்தார். அவருக்கு ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ADVERTISEMENT

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்திருப்பது தேசிய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்தியா கூட்டணிக்கு பூஸ்டர்: கெஜ்ரிவால் ஜாமீன் குறித்து ஸ்டாலின்

அடுத்த அட்சய திரிதியைக்குள்…. தாறுமாறாக ஏறப் போகும் தங்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share