ஓய்வுபெற்ற ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் இன்று (ஜூன் 9) தவெகவில் இணைந்தார். அவருக்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருண்ராஜ், ”தவெகவில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தேர்தல் வெற்றியை தாண்டி அடிப்படை சமூக அரசியல் மாற்றத்திற்காக விஜய் மேற்கொண்டுள்ள பணியில் அவருடன் இணைந்துள்ளேன். தவெகவில் தான் கொள்கை பிடிப்பு இருக்கிறது. மற்ற கட்சிகளில் பெயரளவில் தான் உள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சாதாரண குடிமகனும் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அந்த மாற்றம் நிச்சயமாக தேவை. சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தான் சிவில் சர்வீஸ் பணிக்கு வந்தேன்.
எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது, நன்றாக பணியாற்றிய திருப்தி இருக்கிறது. மக்களுக்கு இன்னும் நிறைய சேவைகள் செய்ய வேண்டும் என்பதால் தான் அரசியலுக்கு வந்துள்ளேன். உண்மையான அதிகாரம் மக்களிடம் தான் இருக்கிறது” என்றார்.
“வருமான வரித்துறை அதிகாரியாக இருக்கும்போது விஜய் வீட்டில் ரெய்டு நடத்தினீர்களா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். உடனடியாக, “அது தவறான தகவல்” என்று பதிலளித்தார் அருண்ராஜ். arunraj clarifies why he joins tvk