அருண் விஜய்யின் மாஸ் ஆக்சன்: புதிய படத்தின் ட்ரெய்லர்!

Published On:

| By Kavi

Arun Vijay Mission Chapter 1 Trailer Released Minnambalam Cinema News

யானை படத்தின் வெற்றிக்கு பிறகு அருண் விஜய் நடிப்பில் வெளியான சினம் படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதனை தொடர்ந்து தற்போது இயக்குநர் ஏ. எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் “மிஷன் : chapter 1 அச்சம் என்பது இல்லையே”.

இந்த படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சாஜயன், அலி ஹாசன், உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைகா புரொடக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டிலேயே இந்த படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வரும் ஜனவரி 12 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ( ஜனவரி 5) இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. ஒரு மிஷனுக்காக சிறையில் கைதியாக உள்ள அருண் விஜய் எப்படி அந்த சிறையில் இருந்து தப்பித்து, வெளியில் ஆபத்தில் உள்ள தனது மகளை காப்பாற்றுகிறார் என்பதே இந்த படத்தின் ஒன் லைன். படம் முழுக்க நிறைய ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

Mission Chapter 1 Trailer | Arun Vijay | Amy Jackson | Nimisha | Vijay | GV Prakash | Subaskaran

தற்போது மிஷன் chapter 1 ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வரும் ஜனவரி 12 ஆம் தேதி மிஷன் படத்துடன் தனுஷின் கேப்டன் மில்லர், விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ், சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களும் வெளியாக இருக்கிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜனவரி 21ல் திமுக இளைஞரணி மாநாடு?

ஸ்டிரைக் முடிவு தொடரும் : போக்குவரத்து தொழிலாளர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை!

ரூபாய் 15 கோடி நஷ்டம்: நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தோனி

கொடநாடு விவகாரம் : எடப்பாடி ஆஜராக உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share