மழை மற்றும் குளிர்காலங்களில் நிறைய பேருக்கு மூட்டுவலி ஏற்படுவதைப் பார்க்கலாம். ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ், ருமட்டாயிடு ஆர்த்ரைட்டிஸ் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு மூட்டுவலியின் தீவிரம் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உண்டு.
குளிர்ச்சியான சீதோஷ்ணநிலை காரணமாக, நம்முடைய கைகள் மற்றும் கால்களில் உள்ள ரத்தக் குழாய்கள் சற்று சுருங்கும். நம்முடைய மூட்டு இணைப்புகளில் சைனோவியல் ஃப்ளூயிட் (Synovial fluid ) என்ற திரவம் இருக்கும். குளிர்ச்சியான சூழலில் அந்தத் திரவமும் சற்று அடர்த்தியாக மாற வாய்ப்பு உண்டு.
தவிர, குளிர், மழை நாட்களில் நம்முடைய உடல் இயக்கமும் சற்று குறைந்துவிடும். வழக்கமாக உடற்பயிற்சி செய்வோர்கூட, இந்த நாட்களில் அதைத் தவிர்ப்பார்கள். மழை மற்றும் குளிர்காலத்தில் மூட்டுவலி ஏற்பட இப்படி பல காரணங்கள் உண்டு. மூட்டுகளின் இறுக்கமும் இந்த நாட்களில் சற்று அதிகமாகவே இருக்கும்.
“தைராய்டு, வைட்டமின் டி குறைபாடு, அனீமியா எனப்படும் ரத்தச்சோகை பிரச்சினைகள் இருப்பவர்கள் அவற்றுக்கெல்லாம் முறையான சிகிச்சைகள் எடுக்க வேண்டும். வைட்டமின் டி மற்றும் மக்னீசியம் சப்ளிமென்ட்டுகள், தசைகளின் வலி மற்றும் களைப்புக்கும், எலும்புகளின் வலிமைக்கும் ஓரளவு உதவும். மருத்துவ ஆலோசனையோடு அவற்றை எடுத்துக்கொள்ளலாம்” என்று அறிவுறுத்துகிறார்கள் இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட்ஸ்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : 53ஆம் ஆண்டில் அதிமுக முதல் பணிக்கு திரும்பும் சாம்சங் ஊழியர்கள் வரை!
கிச்சன் கீர்த்தனா : மூங்கில் அரிசி வேர்க்கடலை லட்டு
சென்னை கனமழை… கோவில்கள் சார்பில் உணவு விநியோகம்!
பாதிரியார் மீது தாக்குதல்: மாஜி அமைச்சர்கள் மீது கொலை முயற்சி வழக்கு… பின்னணி என்ன?