செந்தில்பாலாஜி கைது: முதல்வர் ஆலோசனை!

Published On:

| By Jegadeesh

போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை வீடு உள்பட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் 20 மணி நேர விசாரணைக்குப் பிறகு நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீரென கைது செய்தனர்.

ADVERTISEMENT

அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

சிகிச்சைக்கு பிறகு மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் அமைச்சர்கள் எ.வ.வேலு , உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, ரகுபதி, மா.சுப்பிரமணியன் மற்றும் எம்.பி என்.ஆர் இளங்கோ உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்து செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

ADVERTISEMENT

மருத்துவமனை சென்று செந்தில் பாலாஜி உடல்நலம் குறித்து விசாரித்து திரும்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எம்.பி. என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share