முருகதாஸை கடுப்பேற்றிய ஜெயம் ரவி

Published On:

| By Balaji

ஜெயம்ரவி நடிப்பில் ரிலீசுக்குத் தயாராக இருக்கும் படம் பூமி. ல‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால், சரண்யா பொன்வண்னன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜெயம் ரவியின் 25வது படம் இது.

தற்பொழுது இயக்குநர் அகமது இயக்கத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்துவருகிறார். கடைசியாக ஜெயம்ரவிக்கு ரிலீஸான கோமாளி திரைப்படம் பெரிய ஹிட். அந்தப் படம் கொடுத்த வெற்றியினால் அடுத்தடுத்து பல படங்கள் கமிட்டானார்.

ADVERTISEMENT

ஸ்கிரீன் சீன் நிறுவனத்துக்கு மூன்று படங்கள் நடிக்க ஒப்புக்கொண்டார். அதோடு, இயக்குநர் அட்லீ தயாரிப்பில் ஒரு படமும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் திருக்குமரன் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவும் கமிட்டானார்.

ஆனால், தொடர்ச்சியாகப் படங்களை கமிட் செய்துவிட்டதால், இறுதியாக கமிட்டான ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பு நிறுவனத்துக்குத் தேதிகள் ஒதுக்க முடியாமல் இருந்திருக்கிறார் ஜெயம்ரவி.

ADVERTISEMENT

இந்த மாதம் சொல்கிறேன், அடுத்த மாதம் படப்பிடிப்புக்குப் போய்விடலாம் என இழுத்தடித்திருக்கிறார் ஜெயம்ரவி. இதில் கடுப்பான ஏ.ஆர்.முருகதாஸ் நடிகரை மாற்றிவிடலாம் என முடிவு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதோடு, இரண்டு இளம் நடிகர்களிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தையும் நடந்துவருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, ராஜா ராணி, மான்கராத்தே, ரங்கூன் படங்கள் வெளியாகியிருப்பது கூடுதல் தகவல். விரைவிலேயே அடுத்த தயாரிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

ADVERTISEMENT

**-ஆதினி**

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share