ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது: தமாகாவில் இருந்து ஹரிகரன் நீக்கம்!

Published On:

| By Selvam

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ட்ராங் கொலை வழக்கில் கைதான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஹரிகரன் இன்று (ஜூலை 18) அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அதிமுக முன்னாள் திருவல்லிக்கேணி மேற்கு பகுதி இணை செயலாளர் மலர்க்கொடி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஹரிகரன், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் குமரேசனின் மகன் சதீஷ் ஆகிய மூன்று பேரையும் போலீசார் நேற்று (ஜூலை 17) கைது செய்தனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில், மலர்க்கொடி இன்று அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அதேபோல தமாகா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஹரகரனை நீக்கி தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில மாணவரணி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட  ஹரிகரன் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் இன்று முதல் தமாகாவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள வழக்கறிஞர் அருள், தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள மலர்க்கொடி மற்றும் ஹரிகரன் ஆகியோர் இடையே லட்சக்கணக்கில் பணப்பரிவர்த்தனை நடந்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். அருள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.

ADVERTISEMENT

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் பதவியேற்பு!

காந்திபாபுவின் கம்பி கட்டும் கதை: ஏமாற்று வித்தைகளை அம்பலப்படுத்திய ‘சதுரங்க வேட்டை’!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share