தான் கட்டிய ஆஞ்சநேயர் கோவிலுக்கு விரைவில் பிரதமர் மோடி வருவதாக உறுதியளித்தார் என்று நடிகர் அர்ஜுன் இன்று (ஜனவரி 19) தெரிவித்துள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கேலோ இந்தியா இளைஞர் போட்டியை பிரதமர் மோடி இன்று (ஜனவரி 19) துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், மத்திய இணை எல்.முருகன், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கேலோ இந்தியா போட்டியை துவக்கி வைத்த பின்னர் பிரதமர் மோடியை நடிகர் அர்ஜுன் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அர்ஜுன், “நான் கட்டிய ஆஞ்சநேயர் கோவிலுக்கு வர பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன். விரைவில் வருவதாக உறுதியளித்தார். கேஷுவலாக தான் அவரிடம் பேசினேன். முதல்முறையாக பிரதமர் மோடியை சந்திக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த நபர் மோடி.
நான் பாஜகவில் இணையவில்லை. எனக்கு அரசியலே தெரியாது. என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிரதமர் மோடியை மிகவும் பிடிக்கும். அவர் சென்னைக்கு வரும் தகவல் தெரிந்தது. உடனடியாக அவரை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தார். அதனால் அவரை பார்க்க வந்தேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…