ஈரம், குற்றம் 23 போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் அறிவழகன். குற்றம் 23 படத்திற்கு பிறகு மீண்டும் அறிவழகன் – அருண் விஜய் கூட்டணியில் வெளியான தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸ் கலவையான விமர்சனங்களை பெற்றது.
அந்த வெப் சீரிஸைத் தொடர்ந்து மீண்டும் அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து பார்டர் என்ற படத்தை இயக்கினார்.
ஆனால் படம் இன்னும் வெளியாகவில்லை. இதையடுத்து ஆதியை ஹீரோவாக வைத்து சப்தம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் சிம்ரன், லைலா, லக்ஷ்மி மேனன், ரெடின் கிங்ஸ்லி, ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் சப்தம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 12) சப்தம் படத்தின் டீசரை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டிருக்கிறார்.
ஈரம் படம் போலவே இந்த படமும் ஒரு ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கிறது. நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி சப்தத்தின் மூலமாக பேய் நடமாட்டத்தைக் கண்டறியும் நபராக ஆதி இந்த படத்தில் நடித்திருக்கிறார்.
டீசரில், திகிலூட்டும் பல காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. ஈரம் படத்தில் காட்டப்படும் பேய் நீரை பயன்படுத்தி எதிரிகளைக் கொலை செய்யும்.
அதே போல் சப்தம் படத்தின் டீசரைப் பார்க்கும் போது, சப்தத்தை பயன்படுத்தி தனது எதிரிகளைப் பேய் பழிவாங்குவது போல தெரிகிறது.
டீசர் முழுக்க தமன் இசையால் மிரட்டி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரம் கூட்டணிஎன்பதால் இந்த சப்தம் படத்திற்கும், மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
-கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோவையில் பாஜகவுக்காக தேர்தல் பணியாற்ற மறுப்பா?: பாமக மா.செ.விளக்கம்!
பஹத் ஃபாசிலின் ‘ஆவேசம் ‘ எப்படி இருக்கிறது? – திரைப்பட விமர்சனம்!
பரத் நடிக்கும் கிரைம் த்ரில்லர்… தலைப்பே வித்தியாசமா இருக்கு!