ADVERTISEMENT

குடையை மறக்காதீங்க.. அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பாருங்க!

Published On:

| By Pandeeswari Gurusamy

Rain

தமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில் தற்போது டிட்வா புயல் வலுவிழந்தாலும் தமிழகத்தில் தலைநகர் சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று பிற்பகல் 1மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிபேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஆகிய இடங்களில் மிதமான மழைக்கு வாய்புப்பு உள்ளது.

மேலும் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கோவை ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று இரவுடன் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை நிற்க வாய்ப்பு உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share