ஹெல்த் டிப்ஸ்: அமர்ந்தபடியே வேலை செய்பவர்களா நீங்கள்… இதை அவசியம் படியுங்கள்!

Published On:

| By christopher

Are you Working in a sitting position?

அலுவலகத்தில் உட்கார்ந்த நிலையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்திருக்கிறது. குறைந்தது எட்டு மணி நேரம் சேரில் ஆணி அடித்ததுபோல் இடைவிடாது உட்கார்ந்து வேலை செய்கின்றனர்.

இப்படித் தினமும் எட்டு மணி நேரம் தொடர்ந்து, வாரக்கணக்கில் உட்கார்ந்திருக்கும்போது, தசைகளின் செயல்பாடுகள் குறைந்து, தசைகள் இறுக ஆரம்பிக்கும். அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க, தசைகள்தான் ‘பவர் ஹவுஸ்’ போன்று செயல்படுகிறது. அதில் பிரச்சினை ஏற்பட்டால் கலோரிகள் சரிவர எரிக்கப்படாது.

சுறுசுறுப்பாக ஓடி ஆடும்போதும், உடற்பயிற்சி செய்யும்போதும் ஆக்சிஜன் அதிகம் உள்வாங்குவது இயல்பு. ஆனால், ஒரே இடத்தில் எந்தவித அசைவும் இன்றி இருந்தால், கலோரிகள் எரிக்கப்படுவது குறைந்துவிடும்.

“தினமும் ஆறு முதல் எட்டு மணி நேரம் என, தொடர்ந்து ஒரு வருஷம் வரை நாற்காலியில் உட்காரும்போது, ‘ஒபிசிட்டி’ என்ற உடல் பருமன் பிரச்னை தலைத்தூக்கும்.

உடல் உழைப்பு இல்லாமல் நீண்ட காலம் ஒரே இடத்தில் இருப்பதால், காலப்போக்கில் ‘போன் மேரோ டென்சிட்டி’ என்ற எலும்பின் உறுதித்தன்மை, ஒரு வருடத்துக்கு ஒரு சதவிகிதம் வரை குறைய ஆரம்பிக்கும்.

அத்துடன் உட்கார்ந்த நிலையில், அலுவலகப் பணிகளை முடிக்க முடியாமல் போகும்போது, கூடவே மன அழுத்தம் ஏற்பட்டு, ‘கேட்டகோலமைன்’ என்ற ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும்.

இதனால் இதய நோய் வரலாம்” என்று எச்சரிக்கிறார்கள் பிசியோதெரபிஸ்ட் மற்றும் மறுவாழ்வு சிறப்பு நிபுணர்கள்

மேலும், “தொடர்ந்து தவறான பொசிஷனில் உட்கார்ந்தால் ‘பாஸ்சர்ஸ் ஸ்கோலியசிஸ்’ என்ற பிரச்னை ஏற்படலாம். முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு, முதுகு வலி வரலாம்.

கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் இருப்பதால், ‘ரேடியேட்டிங் பெய்ன்’ (ராடிகலோபதி) என்ற பாதிப்பும் ஏற்படக்கூடும். மேலும், கால்களை தொங்கவிட்டபடி உட்கார்ந்திருக்கும்போது, காலில் வீக்கம், வலி, மறத்துப்போதல் போன்றவை ஏற்படலாம். இதைத் தவிர்க்க…

ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து நின்று, சிறிது தூரம் நடக்க வேண்டும். உட்கார்ந்தபடியே கால்களுக்கு அசைவு கொடுப்பதுபோல், எளிய பயிற்சிகள் செய்யலாம்.

வீடு மற்றும் அலுவலகத்தில் லிஃப்ட்டில் போகாமல் படிகளைப் பயன்படுத்தலாம். கடைத்தெருவுக்கு டூவீலரில் போகாமல், காலார நடக்கலாம். அலுவலகத்துக்குள் இன்டர்னல் மெயில் அனுப்புவதற்கு பதில், சிறிய நடை நடந்து கேபினுக்குச் சென்று கை குலுக்கலாம்.

பிரேக் நேரங்களில் டீ ஆர்டர் பண்ணாமல், பக்கத்தில் இருக்கும் கேன்டீனுக்கு நடந்து சென்று காபி அருந்தலாம்” என்று அறிவுறுத்துகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : பூண்டு காரச்சேவு

முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை: ஸ்டாலின் அறிவிப்பு!

ரூ.106 கோடியா? டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வீட்டில் ரெய்டும்….நாராயணசாமி குற்றச்சாட்டும்!

தீட்சிதர் சஸ்பெண்ட் : அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும்? – நீதிமன்றம் கேள்வி!

தீபாவளி கொண்டாட்டம் : 14,016 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share