பியூட்டி டிப்ஸ்: டாட்டூவை அழிக்க நினைப்பவரா நீங்கள்?

Published On:

| By Kavi

Are you thinking of Remove your tattoo?

டாட்டூவை ஆசையாகப் போட்டுக் கொள்கிறவர்கள் சில பல காரணங்களுக்காக அழிக்க நினைப்பார்கள். அப்படி ஏற்கெனவே குத்திய டாட்டூவை அழிக்க நினைப்பவரா நீங்கள்? சரும நல மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

பச்சை குத்துவதற்கு அந்தக் காலத்தில் தாவரங்களில் இருந்து எடுக்கப்பட்ட இயற்கைச் சாயங்களை மட்டுமே பயன்படுத்தினார்கள். அதனால் பச்சை குத்துவதால் பெரிய பிரச்சினைகள் எதுவும் வந்ததில்லை. பச்சை குத்தும் மையும் எளிதில் போய்விடும். ஆனால், தற்போது டாட்டூ போடுவதற்காக மிகவும் அடர்த்தியான மையினை (Strong dyes) பயன்படுத்துகிறார்கள். அதன் அடர்த்தி காரணமாக பக்கவிளைவுகள் ஏற்படவே சாத்தியங்கள் அதிகம் இருக்கின்றன.

அதனால் டாட்டூவை அழிப்பது மிகவும் சவாலான காரியமாகவே இருக்கிறது. அது ஒரே அமர்விலும் (Sitting) நடந்துவிடாது. பல அமர்வுகள் தேவைப்படும். அதனால் பொறுமை அவசியம்.

டாட்டூ குத்தும்போது என்ன வலி ஏற்பட்டதோ, அதைவிட பல மடங்கு வலியையும் அதை அகற்றும் லேசர் சிகிச்சையில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, பொறுமையாக பல அமர்வுகளில் வலியினைப் பொறுத்துக்கொண்டு டாட்டூவை அகற்றுவதற்கு உளவியல் ரீதியாகவும் தயாராக வேண்டும்.

மேக்ரோபேஜஸ் (Macrophages) செல்களில் இருக்கும் டாட்டூ நிறமியை உடைத்து வெளியில் கொண்டு செல்ல லேசர் முறை சிகிச்சை நடக்கும். இந்தச் சிகிச்சையின்போதும் டாட்டுவை அழிக்க நினைப்பவர்கள் சில ஒவ்வாமைகளை எதிர்கொள்ள வேண்டி வரலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பதவியேற்பு விழாவா? தெலுங்கு சினிமாவா? அப்டேட் குமாரு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக தேர்தல் பணிக்குழு ரெடி!

விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை… தேர்தல் ஆணையத்தில் விஜயபிரபாகரன் மனு!

டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டி இடைத் தேர்தல்! முந்தும் திமுக… அன்புமணிக்கு அண்ணாமலையின் மெசேஜ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share