உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 7) வழக்கறிஞர் ஒருவர் வீடியோ கான்ஃபரன்சில் ஆஜராகி வாதாடும் போது வினோதமான ஒரு நிகழ்வு நடைபெற்றது. are you real judges ask
கொரோனா பரவல் காலம் முதல் நீதிமன்ற விசாரணைகள் ஆன்லைனிலும் நடந்து வருகின்றன. நேரில் ஆஜராக முடியாத வழக்கறிஞர்கள் வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக ஆஜராகி தங்களது வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று நீதிபதிகள் பிவி நாகரத்னா தலைமையிலான அமர்வில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வீடியோ கான்பிரன்சில் ஆஜரான வழக்கறிஞரை பார்த்து நீதிபதிகள் “நீங்கள் உண்மையான மனிதர் தானா? அதாவது are you real?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு அந்த வழக்கறிஞரும், “நான் உண்மையான மனிதர் தான் என்று உறுதி அளிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
நீதிபதிகள் இப்படி கேட்க என்ன காரணம்?are you real judges ask
நியூயார்க் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கின் சார்பாக வாதாட விரும்புவதாக ஆன்லைனில் வீடியோவின் மூலம் ஒருவர் வழக்கறிஞராக பேசினார்.
அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே நீதிபதிகளுக்கு சந்தேகமடைந்து உண்மையிலேயே மனிதர்தானா என கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இந்தநிலையில் வழக்குத் தொடுத்த ஜெரோம் டெவால்ட் , தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு ஏஐ நபரால் முன்பே பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சி என்று விளக்கமளித்திருக்கிறார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், இப்படி செய்வதாக இருந்தால் முன்பே எங்களிடம் தெரிவித்திருக்க வேண்டும் என்று கூறியது.
இந்தசெய்தியை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டிருந்தது.
இதை குறிப்பிட்டுதான் இந்திய உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதிகள் உண்மையான நபரா? ஏஐ நபரா? என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர். are you real judges ask