சென்னையில், சைதாப்பேட்டை டூ தேனாம்பேட்டை வரை போக்குவரத்து மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.Are you going via Saidapet
சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை நான்கு வழி மேம்பால பணிகள் நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்படுகின்றன. இதையொட்டி கடந்த 20ஆம் தேதி முதல் சோதனை முயற்சியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
எங்கிருந்து எங்கு மாற்றம் Are you going via Saidapet
இந்தநிலையில் இந்த மாற்றம் மே 4ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக போக்குவரத்து போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அதில், “தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் செனடாப் சாலை, டர்ன்புல்ஸ் சந்திப்பு வழியாக திருப்பிவிடப்பட்டு, சேமியர்ஸ் சாலையில் (பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலை) வலதுபுறம் திரும்பி நந்தனம் சந்திப்புக்குச் சென்று பின்னர் இடது/வலது புறம் திரும்பி அண்ணாசாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
சைதாப்பேட்டையிலிருந்து சேமியர்ஸ் சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் தடை செய்யப்படும், அதற்கு பதிலாக இவ்வாகனங்கள் அண்ணா சாலை, செனடாப் சாலை, வழியாகச் சென்று பின்னர் சேமியர்ஸ் சாலை வழியாக தங்கள் இலக்கை அடையலாம்.

ஜி.கே.எம் பாலம் செனடாப் சாலையில் இருந்து வரும் வாகனங்களுக்கு மட்டும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும். Are you going via Saidapet
காந்தி மண்டபம் சாலையிலிருந்து வரும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
வாகனங்கள் நிறுத்த தடை Are you going via Saidapet
ரத்னா நகர் பிரதான சாலையும் செனடாப் சாலையிலிருந்து ஒரு வழி பாதையாக இருக்கும். அண்ணாசாலையிலிருந்து செல்ல அனுமதி இல்லை. அண்ணாசாலையில் இருந்து செனடாப் 1வது தெருவிலிருந்து செல்லும் வாகனங்களுக்கு அனுமதிக்கப்படுகிறது, ஆனால் செனடாப் 1வது பிரதான சாலையிலிருந்து செல்ல அனுமதி இல்லை.
கோட்டூர்புரத்திலிருந்து செனடாப் சாலை வழியாக தேனாம்பேட்டை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்படும். இவ்வாகனங்கள் இடதுபுறம் ஜி.கே.எம் பாலம் சர்வீஸ் சாலையில் சென்று டர்ன்புல்ஸ் சந்திப்பு, சேமியர்ஸ் சாலை, நந்தனம் சந்திப்பு, அண்ணாசாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
சீரான போக்குவரத்தினை உறுதி செய்வதற்காக அண்ணாசாலை, செனடாப் சாலை, சேமியர்ஸ் சாலை மற்றும் அதைச்சுற்றியுள்ள ஒருவழிப் பாதைகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடைசெய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Are you going via Saidapet
