நீட் எழுதப் போறீங்களா? இதெல்லாம் மறந்துறாதீங்க!

Published On:

| By indhu

Are you going to write NEET? All this attention!

இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு நாளை (மே 5) நாடு முழுவதும் நடைபெற உள்ளது. சுமார் 23 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வினை எழுத உள்ளனர். தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வினை எழுதுகிறார்கள்.

நீட் தேர்வில் தகுதி பெற்றால் தான் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோபதி, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேர்க்கை பெற முடியும்.

நாடு முழுவதும் 557 நகரங்களிலும், 14 வெளிநாடுகளிலும் நீட் தேர்வு நடைபெறுகிறது.

நாளை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நீட் தேர்வு நடைபெற உள்ளது.

தேர்விற்கு விண்ணப்பித்தவர்களில் 95% மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பில், “நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு நடைபெறும் மையத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னதாக அதாவது மதியம் 12 மணிக்கு வந்துவிட வேண்டும்.

அனைத்து மாணவர்களும் கடுமையான சோதனைகளுக்கு பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். பெண் மாணவர்களிடம் பெண் பணியாளர்கள் மூடப்பட்ட அறைகளில் சோதனை நடத்துவார்கள்.

தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க பயோமெட்ரிக் ஆட்டோமேட்டிகேசன் முறையும் கடைபிடிக்கப்படுகிறது” என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடை கட்டுபாடுகள் குறித்து அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

  • நீண்ட கைகளுடன் கூடிய ஆடைகள் அணிந்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்படாது. எனவே அரைக்கை சட்டை அணிந்து வர வேண்டும்.
  • ஹீல்ஸ் இல்லாத செருப்புகள் மற்றும் ஷூக்கள் மட்டுமே அணிந்து வர வேண்டும்.
  • கைப்பைகள், கண்ணாடிகள், பர்சுகள், பெல்ட், தொப்பி போன்ற பொருட்களுக்கு அனுமதி இல்லை.
  • கைக்கடிகாரம், வளையல், தோடு, மூக்குத்தி, கேமரா போன்ற உலோகப் பொருட்களும் தேர்வு மையத்திற்குள் தடை செய்யப்பட்டுள்ளது.
  • கைப்பேசி, மின்னனு சாதனங்கள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையத்திற்கு முக்கியமாக எடுத்து செல்ல வேண்டியவை:

  1. நீட் யுஜி அட்மிட் கார்டு
  2. தேர்வு மைய விவரங்கள்
  3. சுயவிவரம் அடங்கிய கோப்புகள்
  4. உறுதிமொழி படிவம்
  5. அஞ்சலட்டை அளவு புகைப்படம்
  6. புகைப்பட அடையாளச் சான்று

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிரிக்கெட் வாழ்க்கையில் தோனி தான் எனது தந்தை: மதிஷா பதிரனா உருக்கம்!

ராகுல் பிரதமராக பாக். தலைவர்கள் பிரார்த்தனை: மோடி விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share