பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜனவரி 10) மாலை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகை வரும் 13ஆம் தேதி தொடங்குகிறது. இரு வார வாரவிடுமுறைக்கு மத்தியில் வருவதால் தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை வருகிறது. நீண்ட விடுமுறையை கொண்டாட சென்னை உள்ளிட்ட வெளியூரில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
அவர்களின் வசதிக்காக இன்று முதல் தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.
வரும் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தினசரி இயங்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,736 சிறப்பு பேருந்துகள் என நான்கு நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,104 பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படுகின்றன.
பிற ஊர்களில் இருந்து 7,800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஒட்டுமொத்தமாக பொங்கல் பண்டிகைக்கு 21,904 இயக்கப்படவுள்ளன.
எங்கிருந்து எங்கு?
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம் Moffussil பேருந்து நிலையம் – புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம் மாநகர் பேருந்து நிலையம் (MTC) – வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.
டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு – கிழக்கு கடற்கரை (ECR), காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.
கிழக்கு கடற்கரை (ECR), காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்- பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்.
புகார் எண்?
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் ஏதுவாக, 9445014436 என்ற தொலைபேசி எண்ணை (24X7) மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 (Toll Free Number) மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (Con- trol Room) 24 மணி நேரமும் செயல்படும். பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக பல்வேறு இடங்களில் தகவல் மையங்கள் (May I Help You) அமைக்கப்பட்டுள்ளன.
இணைப்பு பேருந்துகள்
பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு நிலையத்திலிருந்து கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் புதிய பேருந்து நிலையம் ஆகிய இரண்டு பேருந்து |நிலையங்களுக்கும் செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படவுள்ளது.
10.01.2025 முதல் 13.01.2025 வரை கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
முன்பதிவு
பேருந்துகளை முன்பதிவு செய்துகொள்வதற்கு கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 7 முன்பதிவு மையங்கள் செயல்படும். கோயம்பேட்டில் 2 முன்பதிவு மையங்கள் செயல்படும்.
இதுதவிர https://www.tnstc.in/OTRSOnline/ என்ற இணையதளத்திலும் டிஎன்எஸ்டிசி ஆப் வாயிலாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
கார்களுக்கு மாற்றுப்பாதை
கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து (OMR) திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்ல போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
பிரபல ஐரோப்பிய நாட்டின் பிரதமர் : கொச்சியில் சும்மா சுற்றி திரிந்தது ஏன்?
