இன்றைய சூழலில் கம்ப்யூட்டரில் பணியாற்றுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. மூன்று மணி நேரத்துக்கு மேல், தொடர்ச்சியாக கணினியில் பணியாற்றும்போது, சிவிஎஸ் எனப்படும் ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ குறைபாடு ஏற்பட, 90 சதவிகிதம் வாய்ப்புள்ளது.
இந்த பிரச்சினை, எந்த வயதினருக்கும் ஏற்படும். மனிதன் ஒரே இடத்திலேயே மணிக்கணக்கில் அமர்ந்து, கண்களுக்குப் பெரிய அசைவு எதுவுமின்றி, கணினியில் வேலை செய்வதால், கண் சோர்வு, வலி, அரிப்பு, எரிச்சல், மங்கலான பார்வை, தலைவலி மற்றும் இரட்டைக் காட்சி போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதைத் தவிர்ப்பது எப்படி?
“கண்களில் உள்ள நீர்ச்சத்து குறைந்து கண்கள் வறண்டு போகாமல் இருக்க (Dry Eyes) தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.
கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும். இதற்கு 20:20:20 என்ற விதி உதவும்.
ஒருவர் மூன்று முதல் நான்கு மணி நேரம் கம்ப்யூட்டரில் தொடர்ந்து வேலை செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த நபர் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்களை கம்ப்யூட்டரிலிருந்து எடுத்துவிட்டு, 20 அடி தூரத்தில் உள்ள பொருள்களைப் பார்க்க வேண்டும். பின்னர் 20 விநாடிகளுக்குக் கண்களை மூடி, பிறகு திறக்க வேண்டும்.
பொதுவாக, கம்ப்யூட்டருக்கு அருகில் அமர்ந்துகொண்டு அதையே பார்க்கும்போது கண்களில் உள்ள தசைகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.
20:20:20 விதியின்படி தூரத்தில் உள்ளவற்றைப் பார்க்கும்போது, கண் தசைகள் ரிலாக்ஸ் அடையும். பின்னர் கண்களை மூடித் திறக்கும்போது, கண்ணில் நீர்ப்படலம் சேகரமாகும். இதனால் கண் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
சிலர் கண்களைக் கசக்கிக்கொண்டே இருப்பார்கள். அதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
இப்படிச் செய்தால், கையில் இருக்கும் அழுக்கு கண்ணுக்குள் சென்று தொற்று வருவதற்கு வாய்ப்புள்ளது. கண்ணைப் போட்டுத் தேய்ப்பதால் கருவிழிக்குள் பிரச்னைகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்த உணவுகளை உண்ணலாம். கேரட், பப்பாளி, மஞ்சள் பூசணி, பீட்ரூட், மஞ்சள் குடமிளகாய் போன்றவற்றை எடுத்துக்கொள்வது நல்லது.
முருங்கைக் கீரை, பாலக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பால், முட்டை போன்றவற்றை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
அசைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் நிறைந்த மீன் சாப்பிடலாம். இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்’’ என்கிறார்கள் கண் மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா : பாலக் பாஸ்தா!
அந்த 2 கோடி வேலைவாய்ப்பு : அப்டேட் குமாரு
சண்டிகர் தேர்தல் – ஜனநாயக படுகொலை : உச்ச நீதிமன்றம் காட்டம்!