காலையில் சாப்பிட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கும்போதோ, மதியம் நிறைவாக சாப்பிட்ட உணர்வுடன் உட்காரும்போதோ, இரவு உணவை முடித்துக்கொண்டு இன்றைய பொழுது முடிந்தது என்று படுக்க நினைக்கும்போதோ… சாப்பிட்ட உணவு மேல் நோக்கி வரும் உணர்வு சிலருக்கு ஏற்படும். இது, சர்வ சாதாரணமாக ஏற்படக்கூடிய பிரச்சினைதானே என்று நினைத்துக்கொள்வோம்.
இன்னும் சிலர் கார்பன் டை ஆக்ஸைடு நிறைந்த கூல்டிரிங்ஸை குடித்துவிட்டு சரியாகிவிடும் என்ற நினைப்புடன் இருந்துவிடுவார்கள்.
ஆனால், நாள்பட்ட எதுக்களித்தல் இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காரணம், செரிமானப் பிரச்சினைகளில் மிக முக்கியமானது எதுக்களிப்பு என்கிறார்கள் குடல் மற்றும் இரைப்பை நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள்.
“நிரம்ப சாப்பிட்டால்தான் எதுக்களித்தல் வரும் என்பது இல்லை, வேறு சில காரணங்களாலும் ஏற்படலாம்.
ஆஸ்துமா, இதய நோய்கள், எலும்பு நோய்கள் போன்ற பிரச்சினைகளுக்காக மாத்திரை சாப்பிடுவதால் உணவுக்குழாயில் இருக்கும் வால்வின் செயல்திறன் குறைந்து, எதுக்களித்தல் வரலாம்.
அடிக்கடி எதுக்களித்தல் ஏற்பட்டாலோ, எதுக்களித்தல் பிரச்சினையுடன் வாந்தி, பசி குறைதல், எடை குறைதல் இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
அளவான எடையுடன் இருப்பது, உணவு முறையில் மாற்றம், சரியான பொசிஷனில் படுத்து உறங்குவது என மூன்று விஷயங்களை ஒழுங்காகக் கையாண்டாலே எதுக்களித்தல் பிரச்சினை வருவதைப் பெரும்பாலும் தவிர்த்துவிட முடியும்.
அதிகபட்சம் 80 – 90 சதவிகிதத்துக்கு மேல் வயிறு நிரம்பும் அளவு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இரைப்பையில் செரிமானம் நடப்பதற்கு சராசரியாக மூன்று மணி நேரம் ஆகும்.
எனவே, உணவு உண்ட பின்னர் உடனடியாக தூங்குவது, காலை நேர உடற்பயிற்சி அவசியம்” என்கிறார்கள் குடல் மற்றும் இரைப்பை நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : பிரெட் மஞ்சூரியன்
எப்படி தான் டிசைன் டிசைனா யோசிப்பாங்களோ? – அப்டேட் குமாரு
இன்று மின்சார ரயில்கள் ரத்து: தாம்பரத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!