சரும ஆரோக்கியம் மேம்பட உதவும் அழகு சாதனப் பொருட்கள் குறித்த விளம்பரங்கள் மற்றும் இன்ஃபுளூயன்ஸர்களின் பரிந்துரைகள் சோஷியல் மீடியாவில் அதிக அளவில் வருகின்றன.
ஆனால், இதற்குப் பின்னால் இருக்கும் விஷயங்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் சரும மருத்துவர்கள்.
“ஜேட் ரோலர் (Jade Roller), குவா ஷா ஸ்டோன் (Gua Sha Stone) போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி, தளர்ந்த முகத் தசைகளை இறுக்கமாக்க விரும்பும் போக்குகள், சமூக ஊடகங்களின் தாக்கம் காரணமாகப் பெருகி வருகிறது.
ஆனால், அதில் உண்மை கிடையாது. இவை ஆர்கானிக் தயாரிப்பாக புரமோட் பண்ணப்படுவதோடு, பார்ப்பதற்கும் கண்ணைக் கவரும் வண்ணம் இருப்பதால் இவற்றை வாங்கும் எண்ணம் மக்களிடையே அதிகரித்து வருகிறது.
ஆனால், இவையெல்லாம் நம் முகத்தை இறுக்கமாக்கி விடாது என்ற உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். ஏனென்றால், நம்முடைய ஏஜிங் காரணமாக ஈர்ப்பு விசையானது முகத்தின் அடியில் இருக்கும் கொழுப்பு மற்றும் தசைநார் ஆகியவற்றை கீழே பிடித்து இழுக்கும்.
நீங்கள் இந்த ஜேட் ரோலரை வைத்து முகத்தில் மீண்டும் மீண்டும் ரோல் பண்ணுவதால், முகத்தின் அடியில் இறங்கியிருக்கும் கொழுப்பானது ஈர்ப்பு விசையைத் தாண்டி மீண்டும் மேலே சென்றுவிடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அதே சமயத்தில், இந்த ஜேட் ரோலரை ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு பின்னர் இதனை முகத்தில் சற்று ரோல் செய்தால் முகத்திற்கு குளுமை கிடைக்கும்… அவ்வளவே.
அதைவிட்டுவிட்டு, இந்த ரோலரை வைத்து முகத்தில் தேய்த்துக்கொண்டே இருந்தால் உராய்வு காரணமாக கருந்திட்டுகள் வந்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அதேபோல் ரெட்டினால் எனும் ஆன்ட்டி ஏஜிங் க்ரீம் பற்றிய பரிந்துரைகள் நிறைய வருகின்றன. இதில் முரண் என்னவென்றால், 16, 18 வயதுப் பெண்கள்கூட இந்த ஆன்ட்டி ஏஜிங் க்ரீமைப் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், இளமைப் பருவத்தில் அதற்குரிய ஆரோக்கியத்துடன் இருக்கும் சருமத்தின் மீது இந்த ஆன்ட்டி ஏஜிங் க்ரீமைப் போட வேண்டும் என்ற அவசியமே கிடையாது. 29, 30 வயதுக்கு மேல் இந்த ஆன்ட்டி ஏஜிங் க்ரீமைப் பயன்படுத்துவதே சரியானது.
எனவே, எதை நம்முடைய சருமத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருப்பதைப் போலவே, எந்த வயதில் அதைப் பயன்படுத்த வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக, சமூக ஊடகங்களில் பரிந்துரைக்கப்படும் விஷயங்களைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றாமல், சரும மருத்துவ நிபுணரைச் சந்தித்து உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளைப் பெற வேண்டியது மிக அவசியம்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மாங்கொட்டை வற்றல் களனி
தோனி பாணியில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் கேதர் ஜாதவ்
உங்க அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையா? அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: நம்பிக்கையில் இந்தியா, படபடப்பில் பாஜக… கவுன்ட்டிங் க்ளைமேக்ஸ்!