இந்தியர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் நொறுக்கு தீனி பண்டங்களான சமோசா, ஜிலேபி மற்றும் லட்டு ஆகியவை ஆபத்தான உணவு என மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப் போவதாக வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. Samosa Jilebi
உடலுக்கு தீங்கானவை என எச்சரிக்கை தரக் கூடிய உணவுப் பொருட்களில் பட்டியலில் சமோசா, ஜிலேபி இரண்டையும் மத்திய அரசு விரைவில் சேர்க்கப் போகிறது என்பது ஊடக செய்திகள்
அதுவும் சிகரெட்டு பாக்கெட்டுகளில் எச்சரிக்கை வாசகம் இடம் பெற்றிருப்பது போல சமோசா, ஜிலேபி விற்பனைக்கும் ‘எச்சரிக்கை வாசகம்’ வெளியிட இருக்கிறது மத்திய அரசு என்றும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இந்தியர்களின் உடல் எடை அதிகரித்து வருவது குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் மத்திய அரசு இப்படி ஒரு நடவடிக்கையை எடுக்க இருக்கிறது; அடுத்த சில நாட்களில் சமோசா, ஜிலேபிக்கான எச்சரிக்கை வெளியாகும் என்றும் ஊடகங்களின் செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தன.
ஆனால் இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், சமோசா- ஜிலேபி விற்பனைக்கு எச்சரிக்கை விடுக்கப் போகிறது என்கிற செய்திகளில் உண்மை இல்லை எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
