முன்தலையில் முடி உதிர்வு, கூந்தல் மெலிவு பிரச்சினை உள்ளவர்கள் பலரும், இன்று ஆன்லைனில் ஹேர் எக்ஸ்டென்ஷன்ஸ் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். அவை க்ளிப் டைப்பில் இருப்பதால், உபயோகிக்க வசதியாக இருப்பதாக நினைக்கிறார்கள். இப்படிப் பயன்படுத்துவது நல்லதா? எல்லாருக்கும் ஹேர் எக்ஸ்டென்ஷன் ஏற்றதா? ஹேர் எக்ஸ்டென்ஷன்’ எக்ஸ்பர்ட்ஸ் என்ன சொல்கிறார்கள்?
“ஆன்லைனில் ரெடிமேடாக வாங்கும் ஹேர் எக்ஸ்டென்ஷன், உங்களுக்கேற்ற சைஸில் இருக்காது. உங்களுடைய கூந்தலின் தன்மைக்குப் பொருத்தமாகவும் இருக்காது. உங்கள் முகத்துக்குப் பொருத்தமாக இருக்குமா என்பதும் சந்தேகமே. க்ளிப் டைப் எக்ஸ்டென்ஷன்ஸ் உபயோகிக்க வசதியாக இருக்கலாம். ஆனால், சில மணி நேரம் அதைத் தொடர்ந்து பயன்படுத்தினாலே கடுமையான தலைவலி வரும்.
அதையே நீங்கள் பல மாதங்களாகத் தொடர்ந்து உபயோகித்து வரும் பட்சத்தில், உங்களுக்கு முடி உதிர்வும் அதிகமிருக்கும். ஏற்கெனவே கூந்தல் மெலிந்து, மண்டை தெரிகிறது என வருத்தப்படும் நீங்கள், இதுபோன்ற க்ளிப் டைப் எக்ஸ்டென்ஷனை உபயோகித்து உங்கள் பிரச்னையை இன்னும் தீவிரப்படுத்திக் கொள்வீர்கள்.
எனவே, ஹேர் எக்ஸ்டென்ஷன் உபயோகிப்பது என முடிவெடுத்துவிட்டால், அது பற்றி தெரிந்த நிபுணரின் வழிகாட்டுதலோடு உங்களுக்குப் பொருத்தமானதைத் தேர்ந்தெடுங்கள். முக்கியமாக எடை அதிகமானதைத் தவிருங்கள். எடை குறைவாக, க்ளிப் எண்ணிக்கை குறைவாக உள்ளதுதான் பாதுகாப்பானது.
நிபுணரின் வழிகாட்டலோடு உபயோகிக்கும்போது, க்ளிப்பை எப்போது, எப்படி மாற்ற வேண்டும் என்றும் சொல்லித் தருவார். இப்போது க்ளிப்போ, க்ளூவோ இல்லாத வகையில் மிக எளிமையாக உபயோகிக்கக்கூடிய ஹேர் எக்ஸ்டென்ஷன் கிடைக்கிறது. இது உங்கள் முடியை மேலும் உதிராமல் காக்கும்” என்று விளக்கமளிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புறப்பட்டார் ஸ்டாலின்… இதுவரை அமெரிக்கா சென்ற தமிழ்நாடு முதல்வர்கள் பத்தி தெரிஞ்சுக்கங்க!
“இடி மின்னலுடன் மழை” : வானிலை ஆய்வு மையம்!
மம்தா பதவி விலக வேண்டும்: மாணவர்கள் பேரணி….. கலவரமான கொல்கத்தா