48,500 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸ், சைபீரியாவில் உள்ள பனிப்பாறைகளுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் அனைவரையும் அச்சுறுத்தியது. இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன் தொடங்கி எந்தவொரு உலக நாடுகளும் கொரோனாவில் இருந்து தப்பவில்லை.
இப்போது தான் கொரோனாவுக்கு பின் உலகம் மெல்ல இயல்பு நிலையை நோக்கித் திரும்பி வருகிறது. அதேநேரம் உலகில் இருக்கும் மற்ற பல்வேறு வகையான வைரஸ்கள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கிறது.
இதற்கிடையே, வளிமண்டல வெப்பமயமாதல் காரணமாக உறைபனி உருகுவது, மீத்தேன் போன்ற பசுமை இல்ல வாயுக்களை விடுவிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தை மோசமாக்கும் என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில், பல ஆண்டுகளாக ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள ஏரியின் கீழ் உறைந்து கிடந்த 10க்கும் மேற்பட்ட வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பருவநிலை மாற்றம் காரணமாக பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்திருந்த ஏரி உருகியுள்ள நிலையில், இந்த புதிய வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இவை மனிதகுலத்திற்குப் பேராபத்தை விளைவிக்கும் அபாயம் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதில் ஒரு வைரஸ் சுமார் 48,500 ஆண்டுகளாகப் புதைந்திருந்த ஜாம்பி வைரஸ் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவை பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்த நிலையில், இருந்தபோதிலும் அது இன்னும் கூட மனிதர்களைத் தாக்கும் குணத்தைக் கொண்டிருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இந்த வாரம் OTT ரிலீஸுக்கு காத்திருக்கும் படங்கள்! லவ் டுடே முதல் வதந்தி வரை!
எதிரிகளின் வதந்திகளை அறுத்து எறிய வேண்டும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!