யுவன் சங்கர் ராஜா, திரையுலகத்திற்கு இசைஞானி இளையராஜாவின் மகன் என்று அறிமுகமானாலும், தன்னுடைய தனித்துவமான இசையின் மூலம் தனக்கென ஓர் இடத்தைப் பதிவு செய்தார்.
அவர் தனது தந்தையின் பாடல்களிலிருந்து தூண்டுதல் காரணமாக, சில பாடல்களை உருவாக்கியிருப்பதாக மேடைகளில் கூறியிருக்கிறார்.

தமிழ்நாடு இயக்குனர்கள் கூட்டமைப்பினர் நடத்திய 40-ஆம் ஆண்டு விழாவின் போது அவர் பேசும்போது, “ஒரு பாடலில் இருந்து தான் இன்னொரு பாடல் உருவாகும்.
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ பாடலில் இருந்து உருவானது தான் கோவா திரைப்படத்தில் இடம்பெற்ற இதுவரை இல்லாத உணர்விது பாடல்,
மற்றும் ஏதோ… மோகம், ஏதோ… ராகம் பாடலில் இருந்து உருவானது தான் சென்னை-28 படத்தில் வெளியான யாரோ…யாருக்குள் இங்கு யாரோ… என்ற பாடல்.
இளையராஜாவிடமிருந்து பாடல்களை சுடும்போது தெரியாமல் சுடவேண்டும்.” என்று நகைச்சுவையாக அவர் தெரிவித்திருப்பார்.

யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளான இன்று (ஆகஸ்ட் 31) அவரது ரசிகர்கள் இந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
செல்வம்
நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா