நான் என்ன செய்தாலும் சர்ச்சையா? TTF வாசன்

டிரெண்டிங்

விலையுயர்ந்த பைக்குகளை வைத்து கொண்டு அதி வேகத்தில் பயணித்து அதை யூடியூப் சேனலில் வீடியோக்களாக வெளியிட்டு வருபவர் டிடிஎப் வாசன்.

இவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த போது நெறியாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பாதியில் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கோவையை சேர்ந்த டிடிஎப் வாசன் Twin Throttlers என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதி வேகத்தில் பயணம் செய்வதையும், அதை வீடியோவாக எடுத்து தன்னுடைய யூடியூப் சேனலில் பதிவேற்றுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

இவர் வெளியிடும் வீடியோக்களால் கவரப்பட்ட 12 வயது 15 வயது சிறுவர்கள் கூட பைக்குகளில் சாகசங்களை செய்யத் தொடங்கினார்கள்.

டிடிஎப் வாசன் சிறுவர்களை, இளைஞர்களை ஆபத்தான பைக் சாகசங்களுக்கு தூண்டுவதாகவும், அவர்களை தவறாக வழிநடத்ததி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகிறது.

பைக்கில் அதிவேகமாக சென்றதால் அவர் மீது கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல் கோவை சூலூர் காவல் நிலையத்திலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட கூட்டத்தை கூட்டியதாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரான டிடிஎப் வாசன் கோர்டு சூட்டுடன் கெத்தாக நடந்து வரும்போது, பின்னால் வன்முறை தொடர்பான கேஜிஎப் வசனத்தை ஓடவிட்டு வீடியோ வெளியிட்டார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சமீபத்தில் கடலூரில் ஒரு இயக்குநரின் சினிமா அலுவலக திறப்பு விழாவுக்காக சென்ற டிடிஎப் வாசனை அவரது சப்ஸ்கிரைபர்கள் ஏராளமானோர் சூழ்ந்ததால் அங்கு ட்ராபிக் ஜாம் ஏற்பட்டு போலீஸ் தடியடி நடத்தியது.

கடந்த வாரம் தன்னுடைய பெண் தோழியுடன் பைக்கில் சென்ற டிடிஎப் வாசன், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகத்தில் லாரிகளுக்கு இடையில் புகுந்து செல்லும் வீடியோவை வெளியிட்டார்.

அதில்,2 கைகளையும் விட்டுக்கொண்டு அவர் பைக்கை ஓட்டிச் சென்றார். இந்த வீடியோவையும் அவரே சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

youtuber ttf vasan

இந்த நிலையில் ‘நியூஸ்கிளிட்ஸ்’ யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த டிடிஎப் வாசனிடம், விதிகளை மீறி அதிவேகத்தில் பைக்கில் செல்வது குறித்தும் காவல்துறைக்கு சவால் விடுக்கும் விதத்தில் பேசுவது பற்றியும், நீதிமன்றத்துக்கு செல்லும்போது வீடியோ வெளியிட்டது குறித்தும் நெறியாளர் கேள்விகளை எழுப்பினார்.

அந்தப் பேட்டியின்போது நெறியாளர், “உங்கள் பிறந்தநாளுக்கு ஹோட்டல் ஒன்றில் பலர் கூடினார்கள். அப்போது விஜய்க்கு போட்டியாக இவர் நடத்துகிறார். விஜய் போலவே செல்ஃபி போடுகிறார் என கூறப்பட்டதே என கேட்டதற்கு, “நான் எடுத்துக்கொண்ட செல்ஃபி அவ்வாறு மாறிவிட்டது” என்றார் டிடிஎப்.

அதனைத் தொடர்ந்து அப்போ விஜய்க்கு போட்டியாகத்தான் அப்படி எடுத்தீர்களா என நெறியாளர் கேள்வியை தொடர, அதற்கு பதிலளித்த வாசன், “டேய் இவன்லாம் இப்படியாடா இந்த செருப்பும் இந்த செருப்பும் ஒன்னாடானு கேட்டா? ஏன் ரெண்டு செருப்பும் ஒன்னாகக்கூடாதா?” என்று கூறினார்.

youtuber ttf vasan

ஒருகட்டத்தில் 53 ரசிகர்களின் புகைப்படங்களை நான் டாட்டூ போட்டிருக்கிறேன் என்று டிடிஎப் வாசன் சொல்ல..உடனே குறிக்கிட்ட நெறியாளர் “நீங்கள் டாட்டூ குத்துவதால் உங்களை follow செய்கிற இளைஞர்களுக்கு என்ன மாற்றம் நடந்துவிடும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்க வெறும் சர்ச்சையாக கேள்வி கேட்கிறீர்களே என்று கோபத்தில் மைக்கை கழற்றி வைத்துவிட்டு எழுந்து சென்றார் டிடிஎப் வாசன்.

பின்னர், இது குறித்து டிடிஎப் வாசன் ஒரு வீடியோவை வெளியிட்டார், அதில், நான் ஒரு வேர்ல்ட் ரெக்கார்ட் விருது வாங்கியவன் அதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் அவர்கள் சேனலிற்கு பார்வையாளர்கள் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக சர்ச்சைகளை ஏற்படுத்தும் சில்லரை தனமான கேள்விகளை கேட்டதாகவும் அது தனக்கு பிடிக்கவில்லை என்றும் நான் எத்தனையோ பேருக்கு உதவி செய்து இருக்கிறேன் எனவும் அதையெல்லாம் வெளியில் சொல்லவில்லை என்றும் மேலும், நாம் என்ன செய்தாலும் அதை சர்ச்சைகளாக்குவார்கள் எனவும் கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா: பிசிசிஐ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

‘இந்தியாவில் இப்படித்தான் இருக்கும்’ : சித்தார்த்தை துன்புறுத்திய சிஆர்பிஎப்!

+1
0
+1
5
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

2 thoughts on “நான் என்ன செய்தாலும் சர்ச்சையா? TTF வாசன்

  1. இவன் ஒரு ஆளு அப்படின்னு செய்தி போடும் உங்களின் தரம் குறையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

  2. இவன் டாட்டூ குத்தினத்தை வேர்ல்ட் ரெக்கார்டன்னு சொல்லிக்கிட்டு திரியிறான் டுபாக்கூர் பொறம்போக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *