தனது விலை உயர்ந்த பைக்குகளில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அதனை வீடியோவாக பதிவு செய்து யூடியூபில் பதிவிட்டு பிரபலமானவர் டிடிஎஃப் வாசன்.
இவரது பைக் ஸ்டண்டுகள், நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டுவது என இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருப்பதாக சென்னை காவல் துறையில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
அண்மையில் , பிரபல யூடியூபர் ஜி.பி.முத்துவை பைக்கின் பின்புறத்தில் வைத்துக்கொண்டு வாகன நெரிசல் நிறைந்த சாலையில் 150 கி.மீ க்கு அதிகமான வேகத்தில் சென்றதால் இவர் மீது போத்தனூர் காவல் துறையினர் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதேபோல சூலூர் காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர், இந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த டிடிஎஃப் வாசன், இன்று (செப்டம்பர் 28 ) ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார், அதில் தன்னைப் பற்றி அவதூறு பரப்பும் ஊடகத்தினரை எச்சரிக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்துள்ளார். ”TTF பவர் தெரியாம நியூஸ் சேனல்கள் விளையாடிகிட்டு இருக்கீங்க, எனக்கு யாரை பார்த்தும் பயம் கிடையாது .
எல்லாத்துக்குமே ஒரு எல்லை இருக்கு. நீங்க எல்லை கடந்து போறீங்க. பொய்யான செய்தி பரப்புவதை இத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை எனில், நீங்கள் வேலை செய்யும் விதத்தை வெளியிட வேண்டியிருக்கும்” என அதில் தெரிவித்துள்ளார்.
மேலும், இவர் நீதிமன்ற வளாகத்திலேயே, ”இவனுங்க கேஸ் மேல கேஸ் போட்டுட்டு இருப்பானுங்க” என்று காவல் துறையினரை ஒருமையில் பேசிய வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது .
மு.வா.ஜெகதீஸ் குமார்
தோனிக்கு சாபம் விட்ட ரசிகர்: பதான் கொடுத்த நெகிழ்ச்சி பதில்
ஏ.ஆர்.ரகுமான் வரி ஏய்ப்பு: ஆதாரங்களை அடுக்கிய மத்திய அரசு!