பிரபல யூடியூபர் டேன்மே பட் 50 கிலோ வரை எடை குறைந்து ஆளே ஸ்லிம்மாகி அசத்தும் வகையில் மாறியுள்ளார்.
பிரபல காமெடி நடிகரும் யூடியூப் பிரபலமுமான டேன்மே பட் தாறுமாறான எடையில் இருந்தார். ஆனால், இப்போது ஆளே மாறி ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார்.
தனது உடல் எடையை குறைத்தது குறித்து டேன்மே பட் பாட்காஸ்ட் மூலம் கூறியிருப்பது,
”உடல் நலம்தான் அனைவருக்கும் சொத்து. இதை உணர்ந்த தருணத்தில் நான் ஜிம்முக்கு செல்ல தொடங்கினேன். தினமும் 2 மணி நேரம் ஜிம்மில் நேரம் செலவழித்தேன். அதோடு , எனக்கு பிடித்தமாக பேட்மிண்டன் விளையாட்டையும் விளையாடினேன். நல்ல பலன் கிடைத்தது. ஜங் புட் உணவுகளை தவிர்த்து விட்டு, நல்ல ஹெல்த்தியான உணவு பழக்கத்துக்கு மாறினேன். படிப்படியாக எடை குறைந்தது. விடா முயற்சியுடன் போராடினால், கண்டிப்பாக பலன் கிடைக்கும் என்பதற்கு நானே உதாரணமாக மாறியுள்ளேன்.
உங்களது வாழ்க்கைக்கு நீங்கள்தான் பொறுப்பு. மது குடிப்பது, புகைப்பது என எதற்கும் சுற்றியுள்ள நண்பர்களையோ சூழலையோ குற்றம் சொல்லாதீர்கள். அல்லது பணியில் ஏற்படும் ஸ்ட்ரெஸ் காரணமாக புகை பிடிப்பதாகவும் சொல்ல வேண்டாம்.
நமது மூளை சொல்லும் இன்றைக்கு ஜிம்முக்கு போக வேண்டாம். நாளை போய் கொள்ளலாம் என்று கூறும். ஆனால், நாம் மனதளவில் உறுதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் நமது வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஏற்கனவே ஸ்ட்ரெஸ் நிறைந்த வாழ்க்கையில் அதிக எடையுடன் இருந்தது எனக்கு மிகுந்த மன அழுத்தத்தை தந்தது. இப்போது, அந்த மன அழுத்தம் குறைந்து எளிதாக உணருகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
”ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஒருபோதும் அமல்படுத்த முடியாது”: ஸ்டாலின்
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ரேவதி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)