பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கு சென்னை காவல்துறை ,சரியான நம்பர் பிளேட் பொருத்தாதது மற்றும் தலைக்கவசம் அணியாத காரணத்திற்காக ரூ.1500 அபராதம் விதித்திருக்கிறது. youtuber irfan fined
‘Irfan’s view’ என்ற பெயரில், யூடியூப் சேனலை நடத்தி வருபவர் இர்ஃபான். அதில் அவர் பல்வேறு உணவகங்களின் உணவுகளை உண்டு, விமர்சனம் செய்துவருகிறார்.
தலைக்கவசம் அணியாமல் மற்றும் சரியான நம்பர் பிளேட் பொருத்தாமல் விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை இவர் ஓட்டும் காணொளியை ஆகஸ்ட் 1-ஆம் தேதி, எக்ஸ் வலைத்தளத்தில் ஒருவர் பதிவேற்றம் செய்து சென்னை காவல்துறையை டேக் செய்திருந்தார். youtuber irfan fined
இந்த பதிவைப் பார்த்த சென்னை காவல்துறை, இர்ஃபானுக்கு அபராதம் விதித்து அதை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தின் பக்கத்தில் இன்று பதிவேற்றியுள்ளது.
Vehicle traced.#ActionTaken #Chennai #Traffic https://t.co/rN6NZO8vu3 pic.twitter.com/quR1wrg38E
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) August 3, 2024
இதுபோலவே சமீபத்தில் ‘கலாட்டா மீடியா’ எடுத்த பேட்டி ஒன்றில் நடிகர் பிரசாந்த் மற்றும் ‘கலாட்டா மீடியா’வின் தொகுப்பாளர் தலைக்கவசம் அணியாமல், இருசக்கர வாகனம் ஓட்டியதற்காக அவர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“RX 100 bike-ல தான் முதன்முதலா Bike Riding கத்துக்கிட்டேன் ????”-@actorprashanth#Andhagan #Prashanth #Galatta pic.twitter.com/oNSLEjJgzr
— Galatta Media (@galattadotcom) August 1, 2024
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வயநாடு நிலச்சரிவு: ராணுவ உடையில் களமிறங்கிய மோகன்லால்… ரூ.3 கோடி நிதியுதவி!
வயநாடு நிலச்சரிவு: ராணுவ உடையில் களமிறங்கிய மோகன்லால்… ரூ.3 கோடி நிதியுதவி!
தாம்பரம் – கடற்கரை மின்சார ரயில்கள் ரத்து… ஸ்பெஷல் பஸ் இயக்கம்!